பூர்ணிமா பாக்யராஜ் பற்றி முதல் முறையாக ரகசியங்களை உடைத்த மோகன்.. வதந்திகளுக்கு பதிலடி
சென்னை: நடிகர் மோகன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னோடு நடித்த நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். ஏற்கனவே பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் மோகன் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கும் அந்த பேட்டியில் மோகன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
80s களின் கனவு நாயகனாக வலம் வந்த மோகன் அந்த நேரத்தில் சாக்லேட் பாயாக பலரையும் கவர்ந்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் பிசியாக நடித்திருந்தார். தமிழில் மட்டும் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதிலும் தமிழில் அவருக்கு கோகிலா மோகன், வெள்ளி விழா நாயகன், மைக் மோகன் என்று பல பட்ட பெயர்கள் உண்டு. ஆனாலும் புகழின் உச்சத்தில் இருந்த மோகன் சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்பை தொடங்கி இருக்கும் மோகன் ஹரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் சமீபத்தில் அந்த திரைப்படம் வெளியாகி இருந்தது.
ஆனாலும் பெரிய அளவில் மோகனுக்கு அந்த படம் வரவேற்பை கொடுக்கவில்லை. இதுவரைக்கும் சினிமாவில் மோகன் சாக்லேட் பாயாகவும் புல்லாங்குழல் ஊதும் கண்ணனாகவும் பார்த்து வந்த ரசிகர்களுக்கு துப்பாக்கி எடுத்து சுடும் ஹீரோவாக இவர் அறிமுகமானதும் வித்தியாசத்தை கொடுத்திருக்கிறது. ஆனாலும் தொடர்ச்சியாக பல youtube சேனல்களுக்கு மோகன் பேட்டி கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகள் மற்றும் தன்னோடு நடித்த நடிகர்கள், நடிகைகள் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் சில வருடங்களாகவே நடிகர் மோகன் சினிமாவை விட்டு விலகுவதற்கு காரணம் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் என்று ஒரு வதந்தி பரவி வந்தது.
பூர்ணிமா பாக்கியராஜ் மோகனை ஒருதலையாக காதலித்தார் என்றும் அதற்கு மோகன் சம்மதிக்கவில்லை என்பதால் அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று பூர்ணிமா பரப்பி விட்டதாகவும் அதனாலே மோகன் சினிமாவை விட்டு விலகி இருந்தார், அதற்கு பிறகு பூர்ணிமா பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார், என்றெல்லாம் சில youtube களில் சினிமா விமர்சகர்கள் கூட பேசி இருக்கிறார்கள். இதற்கு மோகன் முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில் மோகன் பேசுகையில், பூர்ணிமா பாக்கியராஜ் என்னோடு பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். அதோடு எனக்கு ரொம்பவும் பிடித்த இயக்குனரை அவர் திருமணம் செய்து இருக்கிறார். இப்போதும் நான் பேசும் நெருங்கிய நட்புகளில் ஒருவராக பூர்ணிமா பாக்கியராஜ் இருக்கிறார். இந்த கேமரா மற்றும் லைட்டை நிறுத்திவிட்டால் பூர்ணிமா பாக்யராஜ் பற்றி பல கலகலப்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு அவரோடு நட்பு மற்றும் நிகழ்வுகள் இருக்கிறது. ஆனால் சிலர் தவறாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று அந்த பேட்டியில் மோகன் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications