நடிகை லட்சுமியை பிரிய காரணம் இதுதான்! வாழ்க்கையில் அது மிகவும் மோசமான பகுதி.. மோகன் சர்மா பகீர்
சென்னை: நடிகர் மோகன் சர்மா தான் எதற்காக நடிகை லட்சுமியை பிரிந்தேன் என்பது பற்றி சமீபத்தில் பேசியிருக்கும் பேட்டி தான் இணையத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் அதைத்தொடர்ந்து மற்றொரு சேனலுக்கும் மோகன் சர்மா பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தான் முதல் பேட்டியில் கொடுத்த செய்திகள் எல்லாமே உண்மைதான் ஆனால் அதை ஏன் இப்போது சொன்னேன் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
அதோடு தான் எதற்காக லட்சுமியை பிரிந்தேன் என்பது பற்றி முதல் பேட்டியில் நான் சரியாக சொல்லவில்லை என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அது குறித்து பேசுவதற்காக தான் நான் இந்த பேட்டியில் வந்திருக்கிறேன் என்று மோகன் சர்மா கூறியிருக்கிறார்.

அந்த வகையில் மோகன் சர்மா பேசுகையில் திரைத்துறையில் நானும் ஒரு பிரபலம், லட்சுமியும் ஒரு பிரபலம். நாங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டு அதை கடைசி வரை கொண்டு செல்வது என்பது மிக மிக கடினமானது. என்னுடைய வாழ்க்கையில் எனக்கும் லட்சுமிக்கும் இடையிலான கணவன் மனைவி உறவு பத்து வருடங்கள் நீடித்தது. அதற்கு பிறகு எங்களால் ஒன்றாக இருக்க முடியவில்லை.
அதனால்தான் நாங்கள் பிரிந்தோம். அதுபோல முதல் பேட்டியில் எங்கள் இருவருக்கும் உண்டான பர்சனல் விஷயங்கள் பற்றி நான் மிகவும் ஓப்பனாக பேசி விட்டேன். அப்படி பேசி இருக்கக் கூடாது. நான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது எனக்கு புரிந்தது. அதுபோல இந்த பிரச்சனையில் யார் மீது தவறு என்பதை விசாரணை கமிஷன் வைத்தெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்க முடியாது.
அதுபோல நான் முதல் முறை பேசிய பேட்டியில் சொன்ன விஷயங்கள் எல்லாம் உண்மை என்று நிரூபிக்க என்னிடம் இப்போது எந்த ஆதாரமும் கிடையாது. அப்படி இருக்கும் போது நான் அதை எப்படி உண்மை என்று நிரூபிப்பேன். ஆனால் நான் சொன்னது எல்லாமே உண்மைதான். அதனால் எனக்கு இப்போதும் எப்போதும் மாறுபட்ட கருத்து கிடையாது. லட்சுமி என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக சொன்னார். நானும் அதற்கு ஒத்துக் கொண்டேன்.
அதற்குப் பிறகு எங்கள் இருவருக்கும் அந்த ரூமுக்குள் நடந்த விஷயங்கள், ஏன் நடந்தது என்பதை பற்றி என்னால் சொல்ல முடியாது. அன்று என்னுடைய உள் உணர்வை கேட்டு தான் நானும் லட்சுமியோடு அப்படி இருந்தேன். அதற்கு பிறகு நாங்கள் வாழ்ந்த பத்து வருடங்களில் எங்களுடைய உறவானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டே வந்தது.

அதுபோல ஐஸ்வர்யா என்னிடம் வந்து லட்சுமி அம்மா பிற ஆண்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னபோது நீங்கள் அதை தீர விசாரித்தீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்போதே பிரிந்து விட்டோம். ஒரே வீட்டிலேயே வெவ்வேறு அறைகளில் வசித்துக் கொண்டிருந்தோம். அப்படி இருந்தபோது அதற்கு மேல் அதனை விசாரிப்பது என்பது எனக்கு தேவையில்லாத விஷயம். இதனால் நான் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தேன்.
ஒரு குழந்தை இருக்கிறது... அந்த குழந்தை உங்களுடைய இரத்தமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வேறு ஒரு தொடர்பில் இருப்பது என்பது அந்த குழந்தைக்கு செய்யும் துரோகம் இல்லையா? என்னுடைய வாழ்க்கையில் அந்த பத்து வருடங்கள் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய வாழ்க்கையில் அது மிகவும் மோசமான பகுதி என்று சொல்லுவேன் என்று மோகன் சர்மா பேசியிருக்கிறார்.

ஏற்கனவே மோகன் சர்மா பேசிய முதல் பேட்டியில் லட்சுமி என்னை காதலிப்பதாக சொன்னால் பிறகு நாங்கள் லாட்ஜில் இருக்கும்போது நான் லட்சுமிக்கு நெற்றியில் பொட்டு வைத்து அவரை என்னுடைய மனைவியாக்கி நாங்கள் அன்று முதல் கணவன் மனைவியாக எங்களுடைய வாழ்க்கையை தொடங்கினோம்.
ஆனால் அந்த விஷயம் வெளியே தெரிந்த பிறகு நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டோம் என்று பேசி இருந்தார். அது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு இப்போது இரண்டாவது பேட்டியிலும் லட்சுமி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை மோகன் சர்மா சொல்லி இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications