நிறைமாத நிலவாய் மகள்.. கண்ணீரோடு கட்டி அணைத்த எம்.எஸ் பாஸ்கர்.. வளைகாப்பில் நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் எம் எஸ் பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரின் வளைகாப்பு இன்று எளிமையாய் வீட்டில் கொண்டாடப்பட்டது. அதில் எம் எஸ் பாஸ்கர் தன்னுடைய மகளோடு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா பாஸ்கருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு சில நடிகர், நடிகைகள் தான் அந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை அப்படியே தத்ரூபமாக பொருந்தி விடுகிறார்கள் அதில் ஒருவர்தான் எம்எஸ் பாஸ்கர். எம் எஸ் பாஸ்கர் நடிப்புக்கு போட்டிக்கு யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா படங்களிலும் அவருடைய நடிப்பில் ரசிகர்களின் மனதை ஸ்கோர் செய்து விடுகிறார். வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் சின்ன திரையிலும் தன்னுடைய காமெடி மற்றும் எதார்த்தமான நடிப்பால் பலரையும் சிரிக்க வைத்தவர்.

அதிலும் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பட்டாபி கேரக்டரை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதில் எம்.எஸ். பாஸ்கரன் ஒருவர். கடந்த வருடத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அந்த திரைப்படத்தில் கதாநாயகனை விடவும் எம் எஸ் பாஸ்கர் பெரிய அளவில் பேசப்பட்டார் அது போல சமீபத்தில் வெளியான போட் திரைப்படம் அவருக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்தது. அதுபோல நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷின் தாத்தாவாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் எம் எஸ் பாஸ்கரின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.

பல முன்னணி நடிகைகளுக்கு இவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார். ஐஸ்வர்யா பாஸ்கருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு அகுல் சுதாகர் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யா பாஸ்கர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வளைகாப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.

அப்போது தன்னுடைய மகளோடு எம்.எஸ் பாஸ்கர் பல புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. ஐஸ்வர்யாவிற்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications