CWC யில் நடப்பது இதுதான்.. முதல் நாளே தோனுச்சு! வெங்கடேஷ் பட் குறித்து ஓபன் ஆக பேசிய முத்துக்குமார்

சமீபகாலமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பற்றி பரவி வரும் கேள்விகளுக்கு தற்போது சார்பட்டா நடிகர் முத்துக்குமார் விளக்கம் ஒன்று கொடுத்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப்கள் போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக செஃப் வெங்கடேஷ் பட் கோமாளிகளை அடித்துக் கொண்டிருக்கிறார் என்று பலர் அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடப்பது பற்றி நடிகர் முத்துக்குமார் சில தகவல்களை கூறியிருக்கிறார்.

மாறாத நடுவர்கள்

மாறாத நடுவர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மனதில் பெரும் ஆதரவை பிடித்திருக்கிறது. இந்த கலகலப்பான நிகழ்ச்சியை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். தற்போது இது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கோமாளிகளும் குக்களும் மாறி மாறி வந்தாலும் தொடர்ந்து நான்கு சீசன்களாக மாறாமல் இருப்பது நடுவர்கள் தான். நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவருமே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். இவர்கள் இருவருமே கோமாளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள்.

பிறந்தநாள் பதிவு

பிறந்தநாள் பதிவு

அதிலும் வெங்கடேஷ் பட் கோமாளிகளை வச்சி செய்து விடுவார், இவர் கோமாளிகளை அடிக்கடி பலமாக அடித்து விடுகிறார் என்ற விமர்சனங்களும் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் அடுத்த 14ஆம் தேதி புதிய youtube சேனல் ஒன்று ஆரம்பிக்க இருப்பதாக முகநூலில் பதிவிட்டு இருந்தார். தன்னுடைய பிறந்த நாளில் இத்தனை வருடங்களாக தனக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் நெகிழ்ச்சியான சம்பவங்களையும் அதில்
குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் ஒரு ரசிகர் இவரை குறை சொல்லி கமெண்ட் செய்திருந்தார்.

ரசிகையின் கமாண்ட்

ரசிகையின் கமாண்ட்

அதில் நான் மலேசியாவில் இருந்து குக் வித் கோமாளி ரசிகை நீங்கள் கோமாளியை நடத்தும் விதம் மிகவும் எரிச்சலாக இருக்கிறது. தயவுசெய்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருங்கள். அதை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது பொருட்களை தூக்கி அடிப்பதை நிறுத்துங்கள். மரியாதை கொடுத்து மரியாதை பெறுங்கள். நீங்கள் இதை எல்லாம் வெறும் ஜாலிக்காக மட்டும் தான், உண்மை இல்லை என்று சொன்னாலும் மலேசியாவை சேர்ந்த எங்களால் இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தயவு செய்து எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ இதனை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார்.

வெங்கடேஷ் பட் பதிலடி

வெங்கடேஷ் பட் பதிலடி

இதற்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட் இது வெறும் டிவி நிகழ்ச்சி. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து பார்க்காதீர்கள். கவுண்டமணி செந்திலை அடிக்கவில்லையா? சார்லி சாப்ளின் அடி வாங்கவில்லையா? ஜெர்ரி டாமி எரிச்சல் ஊட்டவில்லையா? கொஞ்சமாவது வளருங்கள். இது வெறும் ஒரு நிகழ்ச்சி. நான் சொன்னேன் என்பதற்காக விஷயத்தை எடுத்து குடித்து விடுவீர்களா? உங்களுக்கு சுய புத்தி கிடையாதா என்று பதிலடி கொடுத்திருந்தார்.

முதல் நாள் கோபம் வந்ததாம்

முதல் நாள் கோபம் வந்ததாம்


இந்த நிலையில் வெங்கடேஷ் பட் குறித்து சார்பட்டா திரைப்பட நடிகரும் முன்னாள் குக் வித் கோமாளி போட்டியாளருமான முத்துக்குமார் ஓபன் ஆக பேசி இருக்கிறார். அதில் குக் வித் கோமாளியில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் முதல் நாளே எனக்கு பட் மீது செம கோபம் வந்தது. முதல் நாளே பரத் மீது கரண்டியை தூக்கி அடித்தார். அப்போது என்ன இந்த ஆளு இப்படி அடிக்கிறார் என்று தான் எனக்கு தோன்றியது. ஏனென்றால் அந்த நிகழ்ச்சியை பற்றி அப்போது எனக்கு எதுவும் தெரியாமல் முதல் நாளில் நடந்த சம்பவம் அது. ஆனால் அதற்குப் பிறகு பரத்திற்கு ஊமை குசும்பு தான் என்று நான் பார்த்தேன். அவரை எப்போதும் பட்டு குட்டி பார்த்து கத்துக்கோ என்று அவரைப் பார்த்து சொன்னால் அவருக்கு கோபம் வருமா? வராதா? அவர் எவ்வளவு பெரிய செஃப் என்று கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+