தேவயானி எனக்கு அக்காவே இல்ல.. அவங்க இப்படி பேசுவாங்கன்னு நான் நினைக்கல.. நடிகர் நகுல் எமோஷனல்
சென்னை: நடிகர் நகுல் வாஸ்கோடகாமா திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் அந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவயானி தன்னுடைய தம்பி நகுல் குறித்து பெருமையாக பேசி இருந்தார். அது குறித்து நகல் தேவயானி பற்றி சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் ஒரு சிலர் பெரிய அளவில் போராட்டங்களை சந்தித்து சாதித்து விடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய குடும்பத்தினர்களும் அவர்கள் வழியில் சாதிக்கலாம் என்று முயற்சி செய்யும் போது அது ஒரு சிலருக்கு மட்டும்தான் வெற்றியை கொடுக்கிறது.

ஒரு சிலருக்கு திறமைகள் இருந்தாலும் அதற்கு சரியான அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்காமல் தான் பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் நகுல் இவர் நடிகை தேவயானியின் தம்பி தான். நகுல் அதனுடைய அக்காவை போலவே சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முயற்சி எடுத்து இருந்த நிலையில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார்.
அந்த திரைப்படத்தில் குண்டாக இருந்தார். அப்போது இதுதான் தேவயானியின் தம்பி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவில்தான் இருந்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகனாக காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் அறிமுகமானார். அப்போது இவர்தான் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்தவர் என்று சொன்னால் நம்ப முடியாது என்று சொல்லும் அளவிற்கு தான் உருமாறி வந்திருந்தார்.
தன்னுடைய தீவிரமான முயற்சியால் உடல் எடையை குறைத்து காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தார். அந்த திரைப்படத்தில் நடிகராக மட்டுமலலாமல் பாடகர் ஆகவும் கலக்கி இருந்தார். அந்த நேரத்தில் இளைஞர்கள் கொண்டாடும் திரைப்படமாக இருந்தது. அதிலும் "தோழியா என் காதலியா நீ யாரடி பெண்ணே" என்ற பாடல்... "உன் தலை முடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது கண்ணே" என்ற பாடல் பெரிய அளவில் ஹிட்டானது.
இந்த திரைப்படத்திற்கு பிறகும் நகுல் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் ஆனால் அது பெரிய அளவில் நகுலுக்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சில வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் வாஸ்கோடகாமா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் பல வருடங்களாக உருவாக்கப்பட்டு வந்தாலும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்காக இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய தம்பிக்காக தேவயானி கலந்து கொண்டு பேசியிருந்தார்.
அப்போது தன்னுடைய தம்பி திறமை குறித்து பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து இருந்தார். இது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் நகுல் பேசி இருக்கிறார். அதில் தேவயானி அக்கா என்னை பற்றி இவ்வளவு பேசுவாங்கன்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்லை. காரணம் நேரில் அக்கா என்னிடம் இவ்வளவு பேச மாட்டாங்க. நல்லா பண்ணுற நகுல் என்ற ஒரு வார்த்தை மட்டும்தான் சொல்லுவாங்க. ஆனால் அவர்களும் என்னுடைய உழைப்பை பார்த்திருக்கிறார், நான் கஷ்டப்படுவதை பார்த்திருக்கிறார், என்னுடைய மனதில் இருப்பதை எல்லாம் புரிந்து வைத்திருக்கிறார் என்பது எனக்கு அன்று இசை வெளியீட்டு விழாவில் தான் தெரிந்தது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு தேவயானி அக்காவே கிடையாது. அவங்க எனக்கு அம்மா தான். காரணம் எனக்கும் அக்காவிற்கும் அதிகமான வயது வித்தியாசம் இருக்கிறது. நான் ஸ்கூல் படிக்கும்போது அக்கா நடிக்க போயிட்டாங்க. அந்த நேரத்தில் அதிகமாக எங்க கூட இருக்க மாட்டாங்க அம்மாவும் அக்காவும் எப்போதும் ஷூட்டிங்கிற்க்கு சென்று விடுவதால் நானும் அண்ணனும் தான் அதிகமாக ஒன்றாக இருப்போம்.
அண்ணனுடன் தான் நான் ரொம்ப டீப்பா இருப்பேன். அக்காவிடம் அவ்வளவு பேசிக் கொள்ள மாட்டேன். ஆனால் அவங்க என்னை எவ்வளவு புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது எனக்கு பிரஸ் மீட்டிங்கில் அக்கா என்னை பற்றி பேசிய போது தான் தெரிந்தது என்று எமோஷனலாக நகுல் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications