பொம்மலாட்டம் முதல் காலா வரை.. மறக்க முடியாத நடிப்பு! நடிகர் நானா படேகர் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக பிரபலமான நானா படேகர் இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவருக்கு வயது 75. கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவரை மீட்க முடியவில்லை. அதிகாலை 5.20 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மணிப்பால் மருத்துவமனையின் புற்றுநோயில் துறை தலைவர் டாக்டர் சேகர் சல்கர் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் காலமானார் என்று கடந்து போக முடியாத அளவுக்கு நானா படேகரின் திரைப்பயணம் பெரியது. நானா படேகர் என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விஸ்வநாத் படேகர், 1978-ம் ஆண்டு வெளியான கமன் திரைப்படத்தின் மூலம் நடிப்பு பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகு இந்தி மற்றும் மராத்தி மொழிப் படங்களில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

Tamil cinema Rajini Nana Patekar

தனித்துவமான நடிப்பு

ஆரம்பத்தில் இருந்தே அவருடைய நடிப்பு மற்ற நடிகர்களிடம் இருந்து தனியாகத் தெரியும். வசனம் பேசும்போதும் சரி, கோபத்தை வெளிப்படுத்தும்போதும் சரி, அமைதியாக ஒரு பார்வை பார்க்கும்போதும் சரி... அந்தக் கதாபாத்திரத்துக்குள் அவர் முழுமையாக சென்றுவிடுவார். பரிந்தா, பிரஹார், அங்கார், திரங்கா, கிராந்திவீர், அக்னி சாக்ஷி, காமோஷி தி மியூசிக்கல், அப் தக் சப்பன் என அவருடைய படங்களின் பட்டியல் நீளும்.

பரிந்தா படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், கிராந்திவீர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், அக்னி சாக்ஷி படத்திற்காக மீண்டும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றவர் நானா படேகர். 2013-ம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

பொம்மலாட்டம் படம்

தமிழ் ரசிகர்களுக்கு நானா படேகரை இன்னும் நெருக்கமாக அறிமுகப்படுத்திய படம் என்றால் அது பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம். 2008-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அர்ஜுன், காஜல் அகர்வால், ருக்மணி விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும், படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது நானா படேகரின் நடிப்புதான்.

படத்தில் திரைப்பட இயக்குநர் ராணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தக் கதாபாத்திரம் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு பக்கம் கண்டிப்பான இயக்குநர், இன்னொரு பக்கம் கோபம், இன்னொரு பக்கம் மர்மம், அதற்குள் இருக்கும் மனிதநேயம் என பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அந்த வேடத்தை நானா படேகர் எந்த அளவுக்கு உள்வாங்கி நடித்தார் என்பதை இப்போது அந்த படத்தை பார்த்தாலும் தெரியும். தமிழில் அவர் பேசிய வசனங்களுக்கு நிழல்கள் ரவி குரல் கொடுத்திருந்தார். பின்னர் காலா படத்தில் மட்டும் நானா படேகர் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு தமிழிலும் இந்தியிலும் அவரே குரல் கொடுத்தார்.

ரஜினிக்கு வில்லன்

தமிழ் ரசிகர்களிடம் நானா படேகரை இன்னும் அதிகமாக கொண்டு சென்றது ரஜினிகாந்த் நடித்த காலா. பா. ரஞ்சித் இயக்கிய அந்தப் படத்தில் ரஜினிகாந்த் காலாவாக நடித்த நிலையில், நானா படேகர் ஹரிதாதா என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காலாவுக்கும் ஹரிதாதாவுக்கும் இடையிலான மோதல்தான் படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று.

நானா படேகரை வெறும் வில்லன் கதாபாத்திரங்களுக்குள் அடைத்துவிட முடியாது. வெல்கம் படத்தில் உதய்பாய் என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவையிலும் கலக்கியிருப்பார். அதே நேரத்தில் அப் தக் சப்பன் போன்ற படங்களில் ஸ்ட்ராங்கான போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார்.

இயக்குநராகவும் இருந்தவர்

நடிப்பைத் தாண்டியும் நானா படேகருக்கு சினிமா மீது இருந்த ஆர்வம் பெரியது. பிரஹார்: தி ஃபைனல் அட்டாக் படத்தின் மூலம் இயக்குநராகவும் அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். இன்று அவர் இல்லை என்ற செய்தி வந்திருக்கிறது. 75 வயதிலும் சினிமாவில் தொடர்பில் இருந்த ஒரு நடிகர் இப்படி திடீரென நம்மை விட்டு சென்றிருப்பது மிகவும் வேதனையான செய்தி. ஒரு பக்கம் பொம்மலாட்டம் படத்தின் ராணா நினைவுக்கு வருகிறார். இன்னொரு பக்கம் காலா படத்தின் ஹரிதாதா நினைவுக்கு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+