விஜயகாந்த் வீட்டிற்கு மனைவியோடு சென்ற நெப்போலியன்.. பிரேமலதா கொடுத்த கிப்ட்.. கண்கலங்க மரியாதை
சென்னை: நடிகர் நெப்போலியன் தன்னுடைய மனைவியோடு சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார்.
நடிகர் மற்றும் தேமுதிக கட்சியின் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் உடல்நிலை குறைபாட்டால் காலமானார். அவருடைய மறைவு இப்ப வரைக்கும் ரசிகர்கள், அவருடைய நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் நெப்போலியன் விஜய்காந்தின் திருஉருவ புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார்.

நடிகர் நெப்போலியன் பல வருடங்களாகவே சினிமாவில் நடித்து வந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு தனது மகனின் உடல் நல குறைபாட்டால் அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் தன்னுடைய மகனின் எங்கேஜ்மென்ட்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்து இருந்தார். அதன்படி நேற்று தனக்கு எங்கேஜ்மென்ட் என்று நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு வந்திருக்கும் நெப்போலியன் தன்னுடைய மனைவியோடு விஜயகாந்த் வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் புத்தகம் ஒன்றை நெப்போலியனுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். அதுபோல விஜயகாந்தின் மகன்களை பார்த்ததும் நெப்போலியன் தன்னுடைய பழைய நினைவுகளை கண் கலங்க பேசி இருக்கிறார்.
விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு நெப்போலியன் அப்போது சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார். நெப்போலியன் விஜயகாந்த் உடன் நடிகர் சங்க பணிகளில் அதிகமாக ஈடுபட்டு இருந்ததாகவும் அவரைப் போன்ற ஆளுமை மிக்க நபரை பார்க்க முடியாது என்றும் நெப்போலியன் அந்த நேரத்தில் பேசி இருந்தார்.
அதுபோல விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது அவருடைய மறைவுக்கு பிறகு கொடுக்கப்பட்டது குறித்தும் நெப்போலியன் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார். அப்போது விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போதே இந்த விருது அவருக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனாலும் அவருடைய சேவை மற்றும் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று நெப்போலியன் பாராட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications