அமெரிக்காவை விட்டு குடும்பத்தோடு ஜப்பான் செல்லும் நெப்போலியன்.. வாழ்வில் மறக்க முடியாது என உருக்கம்
சென்னை: நடிகர் நெப்போலியன் பல வருடங்களாகவே அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு தன்னுடைய குடும்பத்தோடு கிளம்பி போவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த நாளை தன்னால் வாழ்க்கையில் மறக்க முடியாது என்று பதிவிட்டு இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இப்பவரைக்கும் இருக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் அதற்குப் பிறகு கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். அதோடு அரசியலிலும் ஈடுபட்டு எம்எல்ஏவாகவும், மத்திய மந்திரிகாகவும் பதவி வகித்த நெப்போலியன் தற்போது தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

கடந்த மாதத்தில் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் எங்கேஜ்மெண்டை முடித்து இருக்கிறார். வரும் நவம்பர் மாதத்தில் தன்னுடைய மகனின் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். தன்னுடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வீடியோ கால் மூலமாகவே தமிழ்நாட்டில் அதுவும் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைபட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு நிச்சயதார்த்தத்தை முடித்து இருந்தார்.
அதுபோல தன்னுடைய மகன் திருமணம் ஜப்பானில் நடைபெறுவதாகவும் அறிவித்திருக்கிறார். அதிலும் அடுத்த மாதம் தன்னுடைய மகனின் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு கிளம்புவதாக அறிவித்திருக்கிறார்.

அதாவது "அன்பு நண்பர்களே தமிழ் சொந்தங்களே செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவில் நாங்கள் வசிக்கும் Nashville- லில் இருந்து எனது குடும்பத்தோடு ஜப்பானுக்கு பயணம் தொடங்கிய போது நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்து சிறப்பாக வாழ்த்துக்களை அளித்து எங்களை பாசத்தோடு வழியனுப்பி வைத்த மகிழ்வான தருணம். எங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி.. அனைவருக்கும் நன்றி" என்று அந்த பதிவில் நெப்போலியன் கூறியிருக்கிறார்.
அதாவது நெப்போலியனின் மகன் தனுஷால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பல் வழியாகவே அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு பயணம் செய்வதாக ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இப்போது திருமணத்திற்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் பல நாட்கள் பயணித்து தான் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு செல்ல முடியும் என்பதால் கடல் வழியாக செல்லும் பயணத்தை நெப்போலியன் குடும்பத்தினர் தொடங்கி இருக்கிறார்கள்.

இது குறித்து நெப்போலியன் பதிவு வெளியிட்டிருந்த நிலையில் அவருக்கு யூடியூப் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமான இர்ஃபான், விஜய் டிவி பிரபலமான டிஜே பிளாக் போன்றோர் வாழ்த்துக்கள் தெரிவித்து பாதுகாப்பாக பயணம் செய்யும்படி கூறி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications