மீண்டும் மருமகள் வந்ததும் மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த நெப்போலியன்! தனுஷ் இப்போ ரொம்ப ஹேப்பி
சென்னை: அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறியுள்ள நடிகர் நெப்போலியன், தனது மூத்த மகன் தனுஷின் 27வது பிறந்தநாளை அண்மையில் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடியிருக்கிறார். இந்த கொண்டாட்டத்தில் நெப்போலியனின் குடும்பத்துடன் அவரது மூத்த மகனின் மனைவி அக்ஷயாவும் இணைந்திருந்தது, குடும்பத்தினரின் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்தது.
மருமகளுடன் கொண்டாட்டம்
சமீபத்தில் நடைபெற்ற தனுஷின் பிறந்தநாள் விழாவில், நெப்போலியனின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மருமகள் அக்ஷயா மீண்டும் வீட்டிற்கு வந்ததால், நெப்போலியன் கூடுதல் மகிழ்ச்சியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், மகனின் பிறந்தநாள் மட்டுமல்லாமல், மருமகள் வீட்டிற்கு வந்த மகிழ்ச்சியையும் சேர்த்து கொண்டாடுவதாக நெப்போலியன் தெரிவித்துள்ளார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்று வருகின்றன.

நெப்போலியன் - ஒரு பன்முகப் பயணம்
நடிகர் நெப்போலியன், தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் நடிக்க வந்தார். 1991ஆம் ஆண்டு 'புதுநெல்லு புதுநாத்து' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நெப்போலியன், ஆரம்பத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் பெற்றார்.
ஹிட் படங்கள்
'சீவலப்பேரி பாண்டி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்து, பின்னர் 'எஜமான்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவரது கம்பீரமான தோற்றமும், ஆழமான நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தன. எம்.பி., எம்.எல்.ஏ மற்றும் மத்திய அமைச்சர் என அரசியல் களத்திலும் நெப்போலியன் முத்திரை பதித்துள்ளார். இவர் ஜெயசுதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். உடல்நலக் குறைபாடு காரணமாக தனது மூத்த மகன் தனுஷுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க, குடும்பத்துடன் அங்கேயே குடியேறினார்.
மூத்த மகன் தனுஷின் திருமணம்
நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கும், அக்ஷயாவுக்கும் கடந்த ஆண்டு ஜப்பானில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே தனுஷுக்கும் அக்ஷயாவுக்கும் நட்பு இருந்தது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கடந்த சில வாரங்களாக அக்ஷயா தன்னுடைய பெற்றோரை பார்ப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்த நிலையில் இப்போது மீண்டும் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்.
தன்னுடைய மருமகளுக்காக நெப்போலியன் பிரம்மாண்டமான வரவேற்பு வைத்திருந்தார். அட்சயா குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார் என்று சில வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெப்போலியன் வீடியோக்களை பகிர்ந்து இருந்தார் இந்த நிலையில் மகன் தனுஷுடன் அவருடைய மனைவி இணைந்து இந்த பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள். இந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்த நெப்போலியன் தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications