நெப்போலியன் மகனை நேரில் சந்தித்த “பரிதாபங்கள்” கோபி, சுதாகர்.. பெட்ரோல் தீர்ந்து போச்சா? என்ன கதை சொல்றாங்க!
சென்னை: பரிதாபங்கள் youtube சேனல் மூலம் பிரபலமான சுதாகர் மற்றும் கோபி இருவரும் நடிகரும், அரசியல் பிரமுகருமான நெப்போலியனின் மூத்த மகன் தனுஷை அமெரிக்காவிற்கு சென்று நேரில் சந்தித்திருக்கிறார்கள். அப்போது எடுத்த வீடியோவை நெப்போலியன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ந்து இருக்கிறார்.
நடிகர் நெப்போலியன் 80ஸ் காலகட்டத்தில் இறுதியில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், 90ஸ் காலகட்டத்திலும் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். ஆனால் சமீப காலமாக அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து இருக்கிறார். அதுபோல அரசியலிலும் ஈடுபட்டிருந்தார்.

மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். ஆனால் இப்பொழுது அரசியல் மற்றும் சினிமா என எல்லாவற்றையும் விட்டு விலகி தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கிறார். சமீபத்தில் தான் அவருடைய மூத்த மகன் தனுஷுக்கு பிரம்மாண்டமாக ஜப்பானில் வைத்து திருமணத்தை நடத்தி இருந்தார். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னுடைய மகன் ஆசைப்பட்டதற்காக அமெரிக்காவில் குடிபெயர்ந்து இருக்கிறார்.
அதோடு நெப்போலியன் அமெரிக்காவில் பிசினஸ் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அங்கு இயற்கை விவசாயத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கடந்த வருடத்தில் இவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்யப் போகிறார் என்ற செய்தியை கேட்டதும் இணையத்தில் பல விமர்சனங்களும் இருந்தது. சிலர் நெப்போலியனை பாராட்டி வந்தனர். ஒரு சிலர் நெப்போலியன் பற்றி அவதூறு பரப்பி வந்தனர். ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாத நெப்போலியன் அவருடைய மகனுக்கு திருமணத்தை முடித்து வைத்திருந்தார்.
அதுபோல தன்னுடைய குடும்பத்திற்கு தமிழ் நாட்டு மருமகள் தான் வரவேண்டும் என்று நெப்போலியன் ஆசைப்பட்டதால் திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி சார்ந்த அக்ஷயா என்பவரை தன்னுடைய மருமகளாக மாற்றி இருந்தார். அமெரிக்கா மற்றும் ஜப்பானில் குடும்பத்தோடு வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் வீடியோ எடுக்கும் நெப்போலியன் அதை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
தன்னுடைய மகனுக்காக பார்த்து பார்த்து பல விஷயங்களை செய்து கொண்டிருக்கும் நெப்போலியன் இப்போது அவருடைய இன்னொரு ஆசையையும் நிறைவேற்றி வைத்திருக்கிறார். அதாவது தனுஷுக்கு பரிதாபங்கள் youtube சேனல் கோபி மற்றும் சுதாகர் மிகவும் பிடிக்குமாம். அதனால் அமெரிக்காவிற்கு ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த கோபி மற்றும் சுதாகரை நேரில் சந்தித்து அவரை தனுஷை பார்ப்பதற்காக அழைத்து சென்று இருக்கிறார்.

அப்போது கோபி மற்றும் சுதாகர் இருவரும் தனுஷிடம் கிண்டல் செய்து இருக்கிறார்கள். அதாவது நாங்கள் ஏற்கனவே வரணும்னு நினைச்சோம், ஆறு மாசமாக இதற்கு பிளான் போட்டுக்கிட்டே இருந்தோம். அமெரிக்காவுக்கு எப்படியாவது போகணும் அங்க நெப்போலியன் குடும்பத்தை பாக்கணும்னு நினைச்சிட்டு இருந்தோம். அதற்காக பிளைட்ல ஏறி உக்காருந்தோம் ஆனால் பிளைட் பாதி தூரம் வந்துகிட்டு இருக்கும்போது திடீர்னு பெட்ரோல் இல்லன்னு சொல்லிட்டாங்க, அதனால மீண்டும் வந்த இடத்திற்கே போய் பெட்ரோல் போட்டு இப்பதான் வந்திருக்கிறோம் என்று கிண்டல் செய்து கொண்டிருக்க, அதை கேட்டு தனுஷும் சிரித்துக்கொண்டிருக்கிறார்.
அதுபோல தான் தொடர்ந்து பரிதாபங்கள் youtube சேனலை பார்த்து வருவதாகவும் உங்களின் தீவிர ஃபேன் என்றும் தனுஷ் கோபி மற்றும் சுதாகரிடம் சொல்லி இருந்தார். இது குறித்து நெப்போலியன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அன்பு நண்பர்களே, தமிழ் சொந்தங்களே வணக்கம்! சென்ற வார அமெரிக்காவில் நடைபெற்றFeTNA நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த, இன்றைய இளம் தலைமுறைகள் அதிகம் விரும்பி பார்க்கும் youtube இல் தொடர்ந்து வரும் பரிதாபங்கள் என்ற நிகழ்ச்சியில் கதாநாயகர்கள் கோபி மற்றும் சுதாகர் இருவரையும் நானும் FeTNA நிகழ்ச்சிக்கு சென்றதால் சந்திக்க முடிந்தது. எங்கள் மூத்த மகன் தன்ஷுக்கு மிகவும் பிடித்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தேன். எனது அழைப்பை ஏற்று எங்கள் வீட்டிற்கு வருகை தந்து தனுஷுக்கு மகிழ்ச்சியையும் எங்களுக்கு மனநிறைவு தந்தார்கள்" என்று நெப்போலியன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications