Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகள் யார் தெரியுமா? மகனின் நிச்சயதார்த்தம் பற்றி அவரே சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் அதற்கான நிச்சயதார்த்த பத்திரிக்கையை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொடுத்தது குறித்து நெப்போலியன் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய வருங்கால மருமகள் யார் என்பது குறித்தும் நெப்போலியன் பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் இப்போது அதிகமாக சினிமாவில் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது அரசியலில் களம் இறங்கி இருந்தார். திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்த நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக பதவி மற்றும் நடிப்பை விட்டு விட்டு இப்போது அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார்.

Television Actor Napoleon

நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த பிறகு தனுஷ், மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. அவருடைய எங்கேஜ்மென்ட் பத்திரிக்கையை நெப்போலியன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெப்போலியன் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அதில், "அன்புள்ள நண்பர்களே தமிழ் சொந்தங்களே ஜூலை இரண்டாம் நாள் நேற்று காலையில் எனது சகோதரர்களுடன் சென்று நமது மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களை சந்தித்து எனது மூத்த மகன் தனுஷ்க்கும் அக்ஷயா என்கிற பெண்ணுக்கும் நடைபெற இருக்கின்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்துக்களை பெற்றேன் என்று கூறியிருக்கும் நிலையில் ரசிகர்களும் அவருடைய கட்சி உறுப்பினர்களும் நெப்போலியனின் மகனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் நான்கு வயதில் இருக்கும் போதே மற்ற குழந்தைகள் போல இல்லை, இவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நெப்போலியன் அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்காக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியிருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவருக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் 10 வயதிற்கு மேல் நடக்க மாட்டார்கள் என்று அப்போது டாக்டர்கள் சொல்லிவிட்டார்களாம். தன்னால் முடிந்த அளவிற்கு ஆங்கில மருத்துவத்தில் தன்னுடைய மகனின் உடல் நிலையை சரி செய்து விடலாம் என்று எண்ணி அதற்காக போராடிய நெப்போலியனுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது. அந்த நேரத்தில் தான் திருநெல்வேலி பக்கத்தில் ஒரு ஊரில் பாரம்பரிய வைத்தியத்தின் மூலம் இதை படிப்படியாக குணப்படுத்த முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

உடனே தன்னுடைய மகனை அங்கே கூப்பிட்டு போன நெப்போலியன் அங்கு சிகிச்சை எடுத்து இருக்கிறார். அதற்கு பிறகு படிப்படியாக தனுஷ் குணமடைந்திருக்கிறார். ஆனாலும் பெரிய அளவில் அவரால் அந்த நோயிலிருந்து விடுபட முடியவில்லை என்றாலும் இந்த நோய் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளை விடவும் தனுஷ் தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் தன்னுடைய வேலைகளை தானே செய்ய தொடங்கி இருக்கிறார்.

Television Actor Napoleon

அதற்குப் பிறகு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட நெப்போலியன் தன்னுடைய மகனைப் போல இனி யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இதற்காக ஒரு மருத்துவமனையையும் கட்டி கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகனின் எதிர்காலத்திற்காக இந்தியாவை விட்டு அமெரிக்காவில் குடும்பத்தோடு குடிபெயர்ந்த நெப்போலியன் அங்கு பிசினஸ் செய்து வருகிறார்.

தன்னுடைய விடா முயற்சியால் தசை சிதைவு நோயில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் தனுஷ் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்று பலரும் ஆசிர்வாதம் வழங்கி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான் தனுஷை பார்ப்பதற்காக முன்னாள் டிஎஸ்பி ரவி அமெரிக்கா சென்று சந்தித்திருந்தார். அப்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வீடியோவும் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. அதுபோல விஜய் டிவி பிரபலங்களான மாகாபா மற்றும் டிஜே பிளாக் போன்றவர்களும் தனுஷை அமெரிக்காவிற்கு சென்று நேரில் சந்தித்து இருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+