அமெரிக்காவிலும் சாதித்து காட்டிய நெப்போலியன்.. பழசை மறக்கலையே.. அதுவும் 500க்கும் மேற்பட்டோராமே
சென்னை: நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் தான் படித்த கல்லூரியில் படித்த மாணவர்கள் பலரை அமெரிக்காவில் ஒன்றிணைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வெற்றி கண்டு இருக்கிறார்.
அது குறித்து அவருடைய கல்லூரி முதல்வர், முன்னாள் மாணவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 80ஸ் 90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் நடிகராக இருந்திருக்கிறார். இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடிய ஒரு சில பாடல்களும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் அந்த "எட்டு பட்டி ராசாவே" இப்போதும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஒல்லியான தேகத்தோடு பெரிய முறுக்கு மீசை வைத்து மிரட்டும் பார்வையால் இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனவர்கள் ஏராளம். சின்னத்தாயி, ஊர் மரியாதை, எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, தென்காசி பட்டணம், விருமாண்டி என பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம் அவருடைய நடிப்பிற்கு மைல் கல்லாக அமைந்தது.
அந்த காலகட்டத்தில் சரத்குமார், ரஜினிகாந்த்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்துக் கொண்டவர் தான். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கிய நெப்போலியன் திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் தான்.
ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக அரசியலை விட்டு விலகிய நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர் விவசாயத்தையும் செய்து வருகிறார். அதுபோல நெப்போலியன் க்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி தூய வளனார் கல்லூரி முன்னாள் மாணவரான நெப்போலியன் அமெரிக்காவில் பணியாற்றும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து சிறப்பான கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறார். இந்த கூட்டமானது அமெரிக்காவில் நாஷ்வில்லி டென்னசியில் நடைபெற்று இருக்கிறது. இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், முன்னாள் பேராசிரியர்கள், பாதிரியார் அருமைராஜ் மற்றும் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான இன்னாசி முத்து ஆகியோரும் அதில் கலந்து கொண்டு இருக்கின்றனர். கல்லூரிக்கு சிறப்பு சேர்த்த நெப்போலியனுக்கு முன்னால் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர். அது குறித்த வீடியோ ஒன்றை நெப்போலியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்க அது அதிகமான பாராட்டுகளை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications