நெப்போலியன் மகனுக்கு கல்யாணம்.. முதல்வருக்கு நேரடியாக வழங்கப்பட்ட நிச்சயதார்த்த பத்திரிக்கை
சென்னை: நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் தன்னுடைய குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கும் நிலையில் தன்னுடைய மகன் திருமணத்தை விரைவில் நடத்த இருக்கிறார். அதற்கான நிச்சயதார்த்த பத்திரிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் இப்போது அதிகமாக சினிமாவில் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது அரசியலில் களம் இறங்கி இருந்தார். திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்த நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக பதவி மற்றும் நடிப்பை விட்டு விட்டு இப்போது அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார்.

நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த பிறகு தனுஷ், மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் அவருடைய மூத்த மகன் தனுஷ் நான்கு வயதில் இருக்கும் போதே மற்ற குழந்தைகள் போல இல்லை, இவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நெப்போலியன் அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்காக பல மருத்துவமனைக்கு ஏறி இறங்கியிருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவருக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் 10 வயதிற்கு மேல் நடக்க மாட்டார்கள் என்று அப்போது டாக்டர்கள் சொல்லிவிட்டார்களாம். தன்னால் முடிந்த அளவிற்கு ஆங்கில மருத்துவத்தில் தன்னுடைய மகனின் உடல் நிலையை சரி செய்து விடலாம் என்று அதற்காக போராடிய நெப்போலியனுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது. அந்த நேரத்தில் தான் திருநெல்வேலி பக்கத்தில் ஒரு ஊரில் பாரம்பரிய வைத்தியம் மூலம் இதை பண படிப்படியாக குணப்படுத்த முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

உடனே தன்னுடைய மகனை அங்கே கூப்பிட்டு போன நெப்போலியன் அங்கு சிகிச்சை எடுத்து இருக்கிறார். அதற்கு பிறகு படிப்படியாக தனுஷ் குணமடைந்திருக்கிறார். ஆனாலும் பெரிய அளவில் அவரால் அந்த நோயிலிருந்து விடுபட முடியவில்லை என்றாலும் இந்த நோய் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளை விடவும் தனுஷ் தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் தன்னுடைய வேலைகளை தானே செய்ய தொடங்கி இருக்கிறார்.

அதற்குப் பிறகு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட நெப்போலியன் தன்னுடைய மகனைப் போல இனி யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இதற்காக ஒரு மருத்துவமனையையும் கட்டி கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகனின் எதிர்காலத்திற்காக இந்தியாவை விட்டு அமெரிக்காவில் குடும்பத்தோடு குடிபெயர்ந்த நெப்போலியன் அங்கு பிசினஸ் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நெப்போலியனின் இரண்டாவது மகன் குணால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் பட்டப்படிப்பை முடித்ததாக நெப்போலியன் புகைப்படத்தோடு பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம் செய்ய வீட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நிச்சயதார்த்த பத்திரிக்கையை முதலமைச்சரை நேரடியாக சந்தித்து நெப்போலியன் வழங்கி இருக்கிறார். இந்த புகைப்படங்களை இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications