மகனுக்காக அவசரமாக குடும்பத்தோடு ஜப்பான் போகும் நெப்போலியன்.. சிகாகோவில் நெகிழ வைத்த நண்பர்கள்
சென்னை: நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகன் திருமணத்திற்காக தான் ஜப்பானுக்கு அவசரமாக கிளம்புவதாகவும் ஆனால் தான் கிளம்பும்போது தன்னுடைய நண்பர்கள் தன் குடும்பத்திற்காக செய்த செயல் குறித்தும் நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
90ஸ் சினிமாவில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமடைந்த நெப்போலியன் அரசியல் பிரமுகராகவும் இருந்திருக்கிறார். 16 வயதிலேயே தன்னுடைய மாமா கே என் நேருவிற்கு பிஏவாக இருந்த நெப்போலியன் அதற்குப் பிறகு சினிமாவில் இருந்த ஆசையால் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தின் வாய்ப்பு பல போராட்டங்களுக்கு பிறகு தான் கிடைத்தது என்று பேட்டிகளில் அவரே கூறி இருக்கிறார். அதோடு 24 வயதில் நான் 60 வயது தாத்தா வேஷம் போட்டு நடித்தேன் முதல் படத்தில் எனக்கு வில்லனாக வாய்ப்பு கிடைத்தது. அதுவும் என்னுடைய கெட்டப் பார்த்து எனக்கே அழுகை வந்துவிட்டது என்று சொல்லி இருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு வில்லனாக வாய்ப்பு வந்தது.
அதிலும் எஜமான் திரைப்படத்தில் இவருடைய வில்லத்தனத்தை யாராலும் மறக்க முடியாது. அதற்குப் பிறகு இவருக்கு சீவலப்பேரி பாண்டி திரைப்படம் பெரிய அளவில் பெயர் வங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து குணசித்திர வேடங்களிலும் வில்லனாகவும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏவாக தன்னுடைய பயணத்தை தொடங்கி மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.
ஆனால் தன்னுடைய மூத்த மகனுக்கு ஏற்பட்ட தசை சிதைவு நோயால் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி இப்போது அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கிறார். சினிமாவிலும் திரைப்படங்களிலும் புகழின் உச்சத்தில் இருக்கும்போது நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என்று விருப்பப்பட்டதால் குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
அங்கு ஐடி நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வரும் நெப்போலியனிடம் அதிகமான தமிழர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அதோடு 3000 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாயத்தையும் நெப்போலியன் செய்து வருகிறாராம். இது ஒரு பக்கம் இருந்தாலும் நெப்போலியன் மூத்த மகன் தனுஷுக்கு கடந்த சில மதங்களுக்கு முன்பு எங்கேஜ்மென்ட் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் நெப்போலியன் செட்டில் ஆகி இருந்தாலும் அவர் தன்னுடைய மகனுக்கு தமிழ்நாட்டு பெண் தான் வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்த நிலையில் தான் அவர்களுடைய உறவு முறையில் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி சார்ந்த அக்ஷயா என்ற பெண் வரன் வந்திருக்கிறது. தன்னுடைய மகனுக்கு தசை சிதைவு நோய் இருந்தாலும் தனது மகனை உண்மையாக நேசிக்கும் ஒரு பெண் வேண்டும் என்று தான் தேடிக் கொண்டிருந்ததாகவும் இப்போது அட்ஷயா தன்னுடைய மகனை புரிந்து கொண்டு அவரும் எங்களுடைய குடும்பத்தில் இணைந்து விட்டார் என்று நெப்போலியன் கூறி இருந்தார்.
அதோடு என்னுடைய மருமகள்தான் எங்களுடைய குலசாமி. ஒரு குலசாமி எப்படி ஒரு ஊரை, குடும்பத்தை பாதுகாக்குமோ அதுபோல என்னுடைய மருமகள் தான் என்னுடைய அடுத்த வாரிசு என்றும் நெப்போலியன் பேசியிருந்தார். இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது.
நெப்போலியன் இப்போது அமெரிக்காவில் குடி பெயர்ந்து இருந்தாலும் அங்கு வைத்து இவர்களுடைய திருமணத்தை நடத்த முடியாது என்பதால் ஜப்பானில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கிறதாம். அதே நேரத்தில் தனுஷால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பலில் தான் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு செல்கிறார்கள்.
திருநெல்வேலியின் வழக்கப்படி மணப்பெண் வீட்டில் வைத்துதான் திருமணம் நடக்கும் ஆனால் நெப்போலியனின் மகன் அமெரிக்காவில் இருந்து திருநெல்வேலிக்கு கப்பலில் வரவேண்டும் என்றால் ஒரு வருடம் ஆகும் என்பதால் தான் இப்போது மணப்பெண் ஜப்பானுக்கு வரவைத்து அங்கு வைத்து திருமணம் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெப்போலியன் குடும்பத்தோடு கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி ஜப்பானுக்கு கிளம்பி இருக்கிறார்கள்.
அப்போது அவருடைய அமெரிக்க நண்பர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சிகாகோவிற்கு வந்து வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்போது எடுத்த வீடியோவை பகிர்ந்த நெப்போலியன் தன்னுடைய நண்பர்கள் தனக்காக இவ்வளவு மெனக்கெட்டு வந்து இருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டு இருக்கிறார். அதோடு நெப்போலியன் மகனுக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications