வதந்திகளுக்கு பதிலடி! மீண்டும் வீட்டிற்கு வந்த மருமகளுக்கு நெப்போலியன் கொடுத்த வரவேற்பு! நெகிழ்ச்சி பதிவு
சென்னை: தமிழ் திரையுலகில் கம்பீரமான தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் நெப்போலியனின் வீட்டில் தற்போது மகிழ்ச்சி பொங்குகிறது. சில நாட்களாகப் பிரிந்திருந்த தனது மூத்த மகன் தனுஷின் மனைவி அக்ஷயா, நேற்று (ஜூலை 26) நெப்போலியன் இல்லத்திற்குத் திரும்பியுள்ளார். இந்த நிகழ்வை ஒரு விழாவாகவே நெப்போலியன் கொண்டாடி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
நெப்போலியனின் ஆனந்தக் கண்ணீர்
மருமகள் அக்ஷயாவை காரில் அழைத்து வந்த நெப்போலியன், "என் வீட்டில் குலசாமி மீண்டும் வந்துவிட்டது!" என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நெப்போலியனின் உறவினர்கள் அக்ஷயாவிற்குப் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். வீட்டிற்கு வந்ததும் அக்ஷயா, நெப்போலியன் மற்றும் அவரது மனைவியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். பின்னர் தனது கணவர் தனுஷைக் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபகாலமாகவே, நெப்போலியன் அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகனைப் பார்ப்பதற்காகச் சென்ற பிரபலங்களுடன் எடுத்த வீடியோக்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். அந்த வீடியோக்களில் அக்ஷயா இல்லாதது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இப்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அக்ஷயா குடும்பத்துடன் இணைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெப்போலியன் - ஒரு அறிமுகம்
தமிழ்த் திரையுலகில் 1990களில் வில்லனாகவும், பின்னர் குணச்சித்திர நடிகராகவும், நாயகனாகவும் பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நெப்போலியன். இவரது கம்பீரமான குரலும், கட்டுமஸ்தான உடலும் இவருக்குத் தனி அடையாளத்தைக் கொடுத்தன. எம்.எல்.ஏ.வாகவும், மத்திய அமைச்சராகவும் அரசியல் துறையிலும் முத்திரை பதித்தவர். தற்போது இவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வுட்ஸ்டாக் நகரில் வசித்து வருகிறார். அங்கு ஒரு பண்ணை வீடு அமைத்து விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
நெப்போலியன் குடும்பம்
நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவரது மூத்த மகன் தனுஷ், ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்காகவே நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்.
தனுஷ் - அக்ஷயா திருமணம்
நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் - அக்ஷயா திருமணம், உடல்நலக் குறைபாடு இருந்த போதிலும், குடும்பத்தின் முழு சம்மதத்துடன் நடைபெற்றது. குடும்பத்தின் ஆதரவும், மகிழ்ச்சியும் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணத்திற்கு உறுதுணையாக இருந்தன.

வதந்திகளுக்கு பதிலடி
நெப்போலியன் தன்னைப் பற்றியும் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்கிற மாதிரி தான் இப்போது தன்னுடைய மருமகள் வீட்டிற்கு வந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் தனுஷின் முகத்தில் அவ்வளவு பூரிப்பு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தனுஷை பார்ப்பதற்காக பரிதாபங்கள் youtube சேனல் கோபி, சுதாகர் நெப்போலியன் வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது தனுஷ் உடல்நிலை சரியில்லாதது போல சோகமாக இருந்தார். ஆனால் இப்போது அவர் மீண்டும் பழைய நிலைக்கு வந்ததை பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications