நடக்காதோன்னு நினைச்சது நடந்துடுச்சு.. சந்தோஷமாக குடும்பத்தோடு வீடியோ வெளியிட்ட நெப்போலியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷ் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தோடு ஜப்பானில் ஊர் சுற்றி பார்க்கும் போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷமாக பேசி இருக்கிறார்கள்.

நடிகர் நெப்போலியன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அரசியலிலும் முக்கிய பிரபலமாக இருந்தார். எம்எல்ஏவாக தன்னுடைய பயணத்தை தொடங்கி மத்திய அமைச்சராக பணியாற்றிய நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக அரசியல் சினிமா என எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

napoleon

தன்னுடைய மகனுக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வரும் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு சில நாட்களுக்கு முன்பு ஜப்பானில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்திருந்தார். இதில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதோடு திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானதும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

அதே நேரத்தில் ஒரு சில விமர்சனங்களும் எழுந்தது தசை சிதைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் மகனுக்கு நெப்போலியன் இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் செய்கிறாரே அந்த பெண்ணின் வாழ்க்கை என்னாவது என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. தன்னை பற்றி வரும் நெகட்டிவ் கமாண்டுகளை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தங்களுடைய வாழ்க்கையில் கவனத்தை செலுத்தி வரும் நெப்போலியன் குடும்பத்தினர் தன்னுடைய மகன் திருமணத்திற்கு பிறகு ஜப்பானில் தொடர்ச்சியாக சுற்றி பார்த்து வருகிறார்கள்.

napoleon

இன்னும் மூன்று மாதங்களுக்கு ஜப்பானிலேயே குடும்பத்தோடு இருப்பதாகவும் அதற்குப் பிறகுதான் தாங்கள் அமெரிக்காவிற்கு போகப்போகவதாகவும் நெப்போலியன் கூறி இருந்தார். தன்னுடைய மகன் பல வருடங்களாக ஜப்பானில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால்தான் நாங்கள் ஜப்பானிற்கு வந்தோம்.

மகனின் ஆசைக்காக தான் ஜப்பானில் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் நெப்போலியன் கூறி இருக்கிறார். இந்த நிலையில் நெப்போலியனின் மகளின் திருமணத்திற்கு பிறகு மருமகள் மற்றும் மகன்களோடு நெப்போலியன் ஜப்பானுடைய மிக உயரமான மலையான மௌன்ட் பிஜிக்கு போயிருக்கிறார்கள்.

napoleon

ஆனால் அங்கு மிஸ்ட் அதிகமாக இருந்ததால் அந்த வியூவை பார்க்க முடியல. கடைசி நேரத்தில் கிளம்பக் கூடிய அந்த தருணத்தில் மிஸ்ட் எல்லாம் கிளியர் ஆகி மவுண்ட் பிஜியை பார்த்தோம் பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கு என்று நெப்போலியன் பேசி இருக்கிறார்.

அப்போது அவருடைய மனைவி நாங்கள் ரொம்ப நாள் ஆசைப்பட்ட இடத்திற்கு வந்திருந்தோம். ஆனால் இங்கே நாங்கள் நினைத்த வியூ கிடைக்காது என்று நினைத்தோம் ஆனால் கடைசியில் பார்த்து விட்டோம் என்று அவரும் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+