நெப்போலியன் மகன் திருமணத்திற்கு ஓலைச்சுவடி வடிவில் பத்திரிக்கை.. திருமண தேதி திடீர் அறிவிப்பு
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கும் நிலையில் திருமண தேதி மற்றும் இடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமண பத்திரிக்கை பழங்கால ஓலை சுவடி மாடலில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
நெப்போலியனின் மூத்த மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் செய்வது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத நெப்போலியன் தன்னுடைய மகன் திருமண விஷயத்தில் பிஸியாக இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு நெப்போலியன் அவருடைய மகன் எங்கேஜ்மென்டில் தான் எதற்காக தமிழ்நாட்டு பெண்ணை என்னுடைய மருமகளாக மாற்றுகிறேன் என்று பேசிய வீடியோ வெளியாகி இருந்தது. அதில் நான் கடல் கடந்து வாழ்ந்து வந்தாலும் தமிழ் முறையை மறக்க மாட்டேன். என்னுடைய குடும்பத்திற்கு தமிழ் மருமகள் தான் வர வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.. அதற்காகத்தான் நான் தமிழ்நாட்டு மருமகளை தேர்ந்தெடுத்தேன் என்று பேசி இருந்தார்.

அதைத்தொடர்ந்து இப்போது தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமண பத்திரிக்கை வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அது பழங்கால முறைப்படி ஓலைச்சுவடி வடிவில் பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் நெப்போலியன் மகனின் திருமணம் வரும் நவம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை ஜப்பானின் தலைநகரமான டோக்கியாவில் வைத்து நடைபெறுவதாக கூறப்பட்டிருக்கிறது.

நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் தமிழகத்தில் ஜொலித்த நெப்போலியன் இப்போது குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். சினிமாவில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஆரம்பத்தில் இவர் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
அதற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் தான் கே.என் நேருவின் அக்கா மகளாக நெப்போலியன் அரசியலில் குதித்தார். எம்எல்ஏவாக தொடங்கிய தன்னுடைய அரசியல் பயணத்தால் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்காக அரசியல் மற்றும் சினிமா எல்லாவற்றையும் விட்டு விலகி இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். நெப்போலியன் ஜேயசுதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

அதில் மூத்த மகன் தனுஷ் நான்கு வயதில் இருக்கும் போதே தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் அதில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால் அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி அங்கு பிசினஸ் செய்து வருகிறார். ஆனால் தனுஷ் தசை சிதைவால் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகள் போல இல்லாமல் அதிலிருந்து போராடி படித்து தன்னுடைய அப்பாவின் பிசினஸுக்கு சப்போர்ட்டாகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் 25வது வயதாகும் தனுஷுக்கு திருமணம் செய்வதற்காக நெப்போலியன் முயற்சி எடுத்து இருக்கிறார். அந்த நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீடியோ காலில் தனுஷ்க்கும் அக்ஷயாவிற்கும் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அப்போது தனுஷ் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் அவர் அமெரிக்காவில் இருக்க, திருநெல்வேலிக்கு நெப்போலியனும் அவருடைய மனைவி மற்றும் உறவினர்களும் வந்து எங்கேஜ்மென்டை வீடியோ காலில் செய்திருந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications