நெப்போலியன் கப்பல் ஏறி போயாச்சு.. ஜப்பான் மண்ணில் கால் வெச்சாச்சு.. புல்லட் ரயிலில் யார்னு பாருங்க
சென்னை: பிரபல நடிகர் நெப்போலியன் ஒருவழியாக ஜப்பான் மண்ணில் கால் வைத்துவிட்டார் போலும். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. இதையடுத்து, நெப்போலியன் குடும்பத்துக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
பிரபல நடிகர் நெப்போலியன், அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.. இவரது மூத்த மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பதால், அதற்கான சிகிச்சையையும் அமெரிக்காவிலேயே தந்து வருகிறார்.. இப்போது தனுஷிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

ஜப்பான்: சமீபத்தில் சென்னையில் நிச்சயதார்த்தம் முடிந்தநிலையில், திருமணம் ஜப்பானில் நடக்க போகிறது.. ஆனால், மகனால் ஃபிளைட்டில் பயணம் செய்ய முடியாது என்பதால், கல்யாணத்துக்கு கப்பலில் செல்ல முடிவெடுத்திருந்தனர். தனுஷூக்கு நிச்சயதார்த்தம் நடந்ததிலிருந்து இப்போதுவரை, இந்த திருமணம் தொடர்பான விமர்சனங்கள் இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு நடுவில், "ஒரு பக்க சொல் ஒரு யானை பலம், எல்லோரையும் வாழ்த்துங்கள். மனதை நோகடிக்காதீர்கள், வாழ் விடுங்கள் என்று நெப்போலியன் அறிக்கை விட்டு பொதுமக்களை கேட்டுக்கொண்டிருந்தார்.
தன்னம்பிக்கை: "என்னால் முடியாது என்று சிலர் சொல்வதை கேட்கும் போது நான் யார் என்று ப்ரூவ் பண்ணி ஜெயிச்சு காட்டணும் என்று நினைக்கிறேன். நீங்களும் விடாமுயற்சியோடு ட்ரை பண்ணிட்டே இருங்க. நம்மால் அச்சீவ் பண்ண முடியும்" என்று தனுஷ் வீடியோ வெளியிட்டு தன்னுடைய தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

விமர்சனங்களுக்கு அப்பால், திருமண வேலைகள் கடகடவென ஏற்பாடாகி கொண்டிருந்தன.. இந்த திருமணத்துக்கு குஷ்பு, மீனா, கலா மாஸ்டர், பாண்டியராஜன், நடிகர் கார்த்திக் போன்றோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. அதேபோல, சில விஐபிக்களும், சில தொழிலதிபர்களும், சில அரசியல்வாதிகளும், தனிப்பட்ட முறையில் தாங்களே செலவு செய்துகொண்டு திருமணத்தில் பங்கேற்பதாக சொல்லியிருக்கிறார்களாம்.
கப்பல் பயணம்: இந்நிலையில், தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து கப்பலில் ஜப்பானுக்கு பயணப்பட்டார் நெப்போலியன்... சில வாரங்கள் கப்பலில் பயணம் செய்து, அங்கு சென்று சேர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து நெப்போலியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இன்று தனுஷும், குணாலும் டோக்கியோ புல்லட் ரயிலில் ஒசாகாவுக்கு அவர்களது நண்பர்களோடு சென்றார்கள். அவர்கள் உண்மையில் சந்தோஷமாக உணர்ந்தார்கள்" என்றும் நெப்போலியன் பதிவிட்டிருக்கிறார்.
அத்துடன், மகன்களின் வீடியோவையும் நெப்போலியன் ஷேர் செய்திருக்கிறார். அதில், தனுஷ், குணால் 2 பேருமே, டோக்கியோவிலிருந்து ஒசாகாவுக்கு புல்லட் ரயிலில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன...
சிறப்பான வரவேற்பு: அதாவது, தன்னுடைய குடும்பத்துடன் கிட்டத்தட்ட 15 நாட்கள் பயணம் செய்து ஜப்பான் வந்து சேர்ந்திருக்கிறார் நெப்போலியன்.. குஷிரோ துறைமுகத்தில் நெப்போலியனை குடும்பத்தை பூங்கொத்து கொடுத்து அங்கிருந்தவர்கள் சிறப்பாக வரவேற்றிருக்கிறார்கள். திருமணத்துக்கு நாள் நெருங்கி வருவதால், திருமண வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்து வருகிறாராம் நெப்போலியன்...!!
நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் அமெரக்காவில் நடந்தால் குடியுரிமை பிரச்சனை வரும் என்பதால், ஜப்பானில் நடத்த திட்டமிட்டு, நெப்போலியன் அவரின் குடும்பத்தோடு ஜப்பான் வந்திருப்பதாக கூறுகிறார்கள்.. எனவே, தமிழகத்திலிருந்து கல்யாணத்தில் பங்கேற்பதற்காக, ஃபிளைட்டில் 100 பேருக்காகவே அலைந்து திரிந்து விசா வாங்கியிருக்கிறாராம். இணையத்தில் அதிக எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வரும் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது,
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications