மனைவியின் பிறந்த நாளில் நெப்போலியன் வெளியிட்ட உருக்கமான வீடியோ.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
அங்கு தன்னுடைய மனைவி சுதாவின் 51வது பிறந்த நாளை எளிமையாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.
அதோடு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் குறித்த அந்த பதிவில் சில வார்த்தைகளை நெப்போலியன் பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் இந்த வீடியோவிற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகராக இருந்திருக்கிறார். இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடிய ஒரு சில பாடல்களும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் அந்த "எட்டு பட்டி ராசாவை" இப்போதும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஒல்லியான தேகத்தோடு பெரிய முறுக்கு மீசை வைத்து மிரட்டும் பார்வையால் இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனவர்கள் ஏராளம். சின்னத்தாயி, ஊர் மரியாதை, எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, தென்காசி பட்டணம், விருமாண்டி என பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த காலகட்டத்தில் சரத்குமார், ரஜினிகாந்த்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்துக் கொண்டவர் தான். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கிய நெப்போலியன் திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் தான்.
ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக அரசியலை விட்டு விலகிய நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர் விவசாயத்தையும் செய்து வருகிறார். அதுபோல நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மீது தீராத காதலோடு இருக்கும் நெப்போலியன் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவியின் 51 வது பிறந்தநாள் பங்க்ஷனை கொண்டாடி அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் நண்பர்களே நேற்று டிசம்பர் 24 , 2023... எனது மனைவியின் 53வது பிறந்தநாள்.

எனது மூத்த சகோதரர் மற்றும் எனது மைத்துணருடன் எங்கள் குடும்ப நண்பர் வழக்கறிஞர் ஆசிரியரின் இல்லத்தில் கொண்டாடினோம் என்று தகவல் தெரிவித்து இருந்த நிலையில் இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதோடு நெப்போலியன் எப்போதும் குடும்பத்தோடு இப்படி பல ஆண்டுகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது பலருடைய ஆசீர்வாதமாகவும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக கட்டிய மருத்துவமனையில் பல பேர் சிகிச்சை பெற்று நலம் பெற்று வரும் நிலையில் அவர்களும் நெப்போலியனின் மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications