எங்க மகளை தப்பா பேசாதீங்க! திருமணம் செய்ய காரணம் இதுதான்! வெளிப்படையாக பேசிய நெப்போலியன் சம்மந்தி
சென்னை: நடிகர் நெப்போலியனின் மருமகளின் பெற்றோர் பேட்டியில் தங்களுடைய மகளை பற்றி பரவி வரும் நெகட்டிவ் கமாண்டுகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கின்றனர். அதோடு யாரும் எங்களுடைய மகளை தப்பா பேசாதீங்க என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு கடந்த நவம்பர் 7ஆம் தேதி ஜப்பானில் வைத்து திருமணம் நடைபெற்றது. அவருக்கு திருநெல்வேலி மூலைக்கரைப்பட்டியை சார்ந்த பெண்ணோடு தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது. தனுஷ் தசைசிதைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை திருமணம் செய்த பெண்ணை சிலர் பாராட்டி வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஒரு சிலர் அந்தப் பெண் பணத்திற்காக திருமணம் செய்து இருக்கிறார் என்றும் இன்னும் கொஞ்சம் நாட்களில் பிரிந்து விடுவார் என்றெல்லாம் வசைப்பாடி வருகிறார்கள். இது பற்றி வேதனையோடு நெப்போலியனின் மருமகள் அட்ஷயாவின் அம்மா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், என்னுடைய மூத்த மகளுக்கு நான்கு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருக்கிறார். அதுபோலத்தான் என்னுடைய இரண்டாவது மகளுக்கும் நான் வரன் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் நெப்போலியன் குடும்பத்தில் இருந்து எங்களுக்கு வரன் வந்தது.
எங்களுக்கு நெப்போலியன் மாமனார் குடும்பத்தோடு பல வருடங்களாக பழக்கம் இருக்கிறது. நெப்போலியனின் மனைவி ஜெயசுதாவின் அப்பா வசித்த பகுதியில்தான் நாங்களும் வசித்தோம். அதனால் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நெப்போலியன் குடும்பத்தை தெரியும்.
அவர்கள் எங்களுடைய வீட்டில் வந்து பெண் கேட்டபோது நான் முதலில் தயங்கினேன். ஆனால் என்னுடைய பொண்ணு நெப்போலியன் சார் குடும்பத்தை பற்றி எனக்கு தெரியும் நான் அந்த குடும்பத்தில் திருமணம் செய்வது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னார். அதற்கு பிறகு நாங்கள் எல்லோரும் பேசி முடிவெடுத்து தான் திருமணத்திற்கு சம்மதம் சொன்னோம்.
ஆனால் தொடர்ச்சியாக எங்களை பலரும் திட்டிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய மகளை பணத்திற்காக நாங்கள் திருமணம் செய்து கொடுக்கிறோம் என்று அதிகமான கமெண்ட்கள் வந்தது. சமூக வலைதளத்தில் மட்டுமல்ல சொந்தக்காரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட அந்த கமெண்ட் சொன்னார்கள். அது எங்களை ரொம்பவும் பாதிக்க வைத்தது.
என்னுடைய மகள் நன்றாக வாழ வேண்டும் என்று தான் நாங்கள் அவளுக்கு பிடித்த வாழ்க்கைக்கு சம்மதம் சொன்னோம். கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் நாங்கள் ஊருக்கு கிளம்பி விட்டோம். என்னுடைய மகள் அதை நினைத்து வருத்தப்படுகிறார். எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.. ஆனால் அவளுடைய குடும்பத்தார் அவளை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அதுபோல என்னுடைய மகள் ரொம்பவும் துரு துருவென இருப்பவள். இனி எப்படி அமெரிக்காவில் இருக்கப் போகிறார் என்ற வருத்தமும் இருக்கிறது. மாப்பிள்ளை தனுஷ் என்னுடைய பொண்ணு மீது அதிகமான பாசம் வைத்திருக்கிறார். அவளை அதிகமாக கேர் செய்து பார்ப்பது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
அதனால் தயவு செய்து யாரும் என்னுடைய பொண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள். அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று அந்த பேட்டியில் அக்ஷயாவின் அம்மா எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications