வீடியோ காலில் நடந்த நெப்போலியன் மகன் எங்கேஜ்மென்ட்.. பொண்ணு திருநெல்வேலி தான்.. யாருன்னு பாருங்க
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் நிச்சயதார்த்த விழா வீடியோ காலில் நடந்து முடிந்த காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தனுஷ் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அவருடைய வருங்கால மனைவி திருநெல்வேலியில் இருக்க வீடியோ காலில் என்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது.
சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த நெப்போலியன் அரசியலிலும் ஈடுபட்டு மத்திய அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். ஆனால் தன்னுடைய மகனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.

நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் தனுஷிற்கு நான்கு வயதில் இருக்கும்போதே தசை சிதைவு நோய் ஏற்பட்டு இருந்த நிலையில் அவரை திருநெல்வேலியின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பாரம்பரிய முறையில் மருத்துவம் பார்ப்பது தெரிய வந்ததும் அங்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்.

அதில் தன்னுடைய மகனின் உடல்நிலை தேறி வர பிறகு தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு வெளிநாடு சுற்றுலா சென்று வந்த நிலையில் அங்கு அவருக்கு அமெரிக்கா பிடித்து போக அமெரிக்காவில் குடும்பத்தோடு நெப்போலியன் செட்டில் ஆகி இருக்கிறார். அங்கு சொந்தமாக பிசினஸை கவனித்து வரும் நெப்போலியன் இயற்கை விவசாயத்தையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் 25 வயதாகும் தன்னுடைய மகன் தனுஷ்க்கு திருமணம் செய்ய நெப்போலியன் ஏற்பாடு செய்திருந்த நிலையில் சமீபத்தில் அவருடைய என்கேஜ்மென்ட் நடந்து முடிந்திருக்கிறது. அது குறித்து தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய எங்கேஜ்மென்ட் முடிவடைந்துவிட்டது என்று வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.
இப்படியான நிலையில் நெப்போலியனின் மகன் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தனுஷிற்கு உடல்நிலை பிரச்சனை இருப்பதால் தனுஷ் விமானத்தில் அதிகமாக பயணிக்க முடியாது என்பதால் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் நெப்போலியன் தன்னுடைய குடும்பத்தோடு இந்தியா வந்திருக்கிறார்.

இங்கு தான் நெப்போலியன் மருமகள் இருக்கிறார். அதுவும் நெப்போலியனின் வருங்கால மருமகள் அக்ஷயாவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தான். திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சார்ந்த விவேகானந்தர் என்பவரின் மகளைத்தான் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய இருக்கிறார். இது குறித்த வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து பலரும் தனுஷிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications