நெப்போலியன் மகன் திருமணத்தில்.. குஷ்பூ, ராதிகாவை தங்க வைக்க ஹோட்டல் வாடகை எவ்வளவு?
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு விருந்தினராக வந்திருக்கும் குஷ்பூ, ராதிகா, மீனா போன்றோர்களை தங்க வைப்பதற்காக நெப்போலியன் அரேஞ்ச் செய்த அறையின் வாடகை ஒரு நாளைக்கு எவ்வளவு என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ்க்கு நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்காக நெப்போலியனின் திரைத்துறை நண்பர்கள் பலரும் கடந்த வாரத்தில் இருந்து ஜப்பானுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் நெப்போலியனின் நெருங்கிய நண்பரான நடிகர் சரத்குமார் அவருடைய மனைவி ராதிகா மற்றும் மகனோடு நேற்று முன்தினம் ஜப்பானுக்கு சென்றிருந்தார். அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே நடிகை மீனா, குஷ்பூ, கலா மாஸ்டர், கார்த்தி, பாண்டியராஜன் போன்றோரும் ஜப்பானுக்கு சென்று விட்டார்கள்.
இவர்கள் எல்லோரும் தங்குவதற்கு நெப்போலியன் தான் அங்கு ஹோட்டல் ரூம் அரேஞ்ச் செய்து இருக்கிறாராம். அங்கு அறையில் ஒரு இரவுக்கான வாடகை இந்திய மதிப்பில் சுமார் 50,000 ரூபாய்க்கு மேலே இருக்கிறது. ஆனாலும் 15 அறைகளுக்கு மேலே நெப்போலியன் புக் பண்ணி வைத்திருக்கிறாராம்.
தன்னுடைய மகன் திருமணத்திற்கு வரும் பிரபலங்கள் எல்லோரையும் ஏர்போர்ட்டில் இருந்து நேரடியாக சென்று நெப்போலியனே அழைத்து வந்து இருக்கிறார். மேலும் பிரிமியர் பிரிவில் புக் செய்யப்பட்ட அறையில் மேக்கப் செய்வதற்கு ஒரு அறை, மாஸ்டர் பெட்ரூம், பால்கனி என பல வசதிகள் உள்ளதாம். ஷாப்பிங் செய்வதற்கும் மால், ரெஸ்டாரன்ட் என பெரிய அளவில் நல்ல லொகேஷன் உள்ள ஹோட்டலில் தான் நெப்போலியன் தன்னுடைய நண்பர்களுக்காக அறையை அரேஞ்ச் செய்து கொடுத்திருக்கிறாராம்.
அதுபோல ஜப்பானில் திருமணம் நடந்தாலும் அங்கு இந்திய உணவு தான் நெப்போலியன் அரேஞ்ச் செய்து இருக்கிறாராம். இட்லி, பொங்கல், பூரி, தோசை, சட்னி, சாம்பார் என்று எல்லாவிதமான உணவுகளும் தமிழ்நாட்டை சார்ந்த செஃப்கள் கொண்டு சமைக்கப்பட்டு இருக்கிறதாம். அதோடு தன்னுடைய நண்பர்கள் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பே ஜப்பானில் சுற்றி பார்ப்பதற்கு ஏதுவாகவும் பல ஏற்பாடுகளை நெப்போலியன் செய்து கொடுத்திருக்கிறாராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications