காதல் கை கூடியது.. மனைவியோடு போட்டோ சூட் எடுத்த நெப்போலியன் மகன்.. குவியுது வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் மகனும் வருங்கால மருமகளும் ஜப்பானில் போட்டோ சூட் எடுத்து இருக்கிறார்கள். இந்த வீடியோவை அவருடைய நண்பர் ஒருவர் பகிர்ந்து இருக்கையில் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதற்குப் பிறகு கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் சினிமாவில் அறிமுகமானார்.

napoleon

சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே தன்னுடைய மாமா கே என் நேருவிற்கு உதவியாளராக வேலை செய்து வந்த நிலையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எம்எல்ஏவாகி அதற்குப் பிறகு மத்திய அமைச்சராகவும் மாறி இருந்தார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்த நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக சினிமா மற்றும் அரசியலை விட்டு விட்டு குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.

நெப்போலியன் சுதா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகன் தனுஷ்க்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தன்னுடைய மகனுக்காக திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்தியம் பார்த்த நிலையில் அங்கு அவரை போலவே பலர் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த போது அங்கு போதிய வசதி இல்லை என்பதால் நெப்போலியன் தன்னுடைய செலவில் ஒரு பெரிய மருத்துவமனையை கட்டிக் கொடுத்திருக்கிறார்.

இப்போ வரைக்கும் அங்கு பல நாடுகளில் இருந்தும் பலர் வந்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு 24 வயதாகும்போது திருமணம் செய்து வைப்பதற்காக முயற்சி செய்திருந்தார்.

வெளிநாட்டில் இப்போது வசித்து வந்தாலும் தன்னுடைய மருமகள் தமிழ்நாட்டு பொண்ணாக தான் இருக்க வேண்டும் என்று தன்னுடைய குடும்பத்தினர் ஆசைப்பட்டது போலவே திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு தன்னுடைய மகனுக்கு நிச்சயம் செய்திருந்தார்.

தன்னுடைய மகனுக்கு இருக்கும் குறையை தெரிந்து கொண்டு அவரோடு பேசி பழகிதான் அந்தப் பெண் தன்னுடைய மகனை கல்யாணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்தார் என்றும் நெப்போலியன் தெரிவித்திருந்தார். ஆனாலும் நெப்போலியன் தசை சிதைவால் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைப்பது சிலரால் பாராட்டப்பட்டு வந்தாலும் ஒரு சிலர் அதையும் விமர்சித்து வந்தனர்.

napoleon

தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு தனுஷ் சில வாரங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் நாளை நவம்பர் 7ஆம் தேதி தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு நேற்று தனுஷ் மற்றும் அக்ஷயா இருவரும் போட்டோ சூட் எடுத்து இருக்கிறார்கள். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+