நெப்போலியன் மகனின் எளிமையான பிறந்தநாள்.. அண்ணனுக்காக தம்பி செய்த செயல்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ்க்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. சமீபத்தில் தான் இவருக்கு வீடியோ காலில் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. இந்த நிலையில் தன்னுடைய 26 ஆவது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடி இருக்கிறார். அப்போது அவருடைய தம்பி குட்டி கேக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
தமிழ் சினிமா ஹீரோக்களில் உயரமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் நெப்போலியன் எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்று பல முக்கியமான படங்களில் நடித்து பெரிய அளவில் பிரபலமடைந்தார். இப்ப வரைக்கும் இவருக்கு இந்த திரைப்படங்கள் அடையாளமாகவே அமைந்துவிடுகிறது.

நடிப்பில் மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கி எம்எல்ஏவாகவும் தன்னுடைய பயணத்தை தொடங்கி மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஜீவன் டெக்னாலஜி என்னும் மென்பொருள் தொழிலை ஆரம்பித்து அதில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மயிலாப்பூரில் ஆரம்பித்த இவருடைய தொழில் இப்போது அமெரிக்கா ஐரோப்பா வரை பரந்து விரிந்து கொண்டிருக்கிறது.
ஜீவன் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை அமெரிக்காவில் நிறுவி அங்கு குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். அது மட்டுமல்லாமல் அங்கு இயற்கை விவசாயத்தையும் செய்து வருகிறார். தன்னுடைய மகன் தனுஷின் தசை அலர்ஜி நோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நெப்போலியன் எதிர்பார்த்த அளவிற்கு அவருடைய மகனின் உடல்நிலை தேறவில்லை என்றாலும் அவருடைய மகன் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்று விரும்பியதும் தன்னுடைய சினிமா அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் நெப்போலியன் செட்டில் ஆகி இருக்கிறார்.
தனுஷுக்கு உடல்நிலை ஓரளவிற்கு சரியாகி இருந்தாலும் இருசக்கர நாற்காலியில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு திருநெல்வேலியில் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்திருக்கிறார்கள். தன்னுடைய மகனால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்பதால் வீடியோ காலில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெப்போலியனின் மகனின் திருமணம் ஜப்பான் நாட்டில் வரும் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனுஷின் 26 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. ஆனால் தனுஷ் எளிமையாக தான் கொண்டாடி இருக்கிறார். தன்னுடைய தம்பி ஒரு சின்ன ப்ளேட்டில் குட்டி கேக் வைத்து அதில் குட்டி மெழுகுவர்த்தியை வைத்து தனுஷிடம் காட்ட அதை ஊதி தன்னுடைய பிறந்த நாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு தனுஷ் கொண்டாடியிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் பகிர்ந்திருக்கும் நிலையில் அவருக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications