நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் நெப்போலியன் மகன்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் என வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த பதிவிற்கு இணையத்தில் அதிகமான பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நெப்போலியன் இப்போது ஆரம்பத்தை போல அதிகமாக சினிமாவில் நடிப்பதில்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது அரசியலிலும் இறங்கி திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்த நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக பதவி மற்றும் நடிப்பை விட்டு விலகி இப்போது அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார்.

நெப்போலியன் ஜேயசுதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் தனுஷ்க்கு நான்கு வயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த நோயின் தீவிரத்தை புரிந்து கொண்ட நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக அழைத்து சென்றிருக்கிறார்.

அந்த நேரத்தில் தான் அவருக்கு திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஊரில் பாரம்பரிய முறையில் இதற்கு மருத்துவம் பார்ப்பது தெரியவர அங்கு தன்னுடைய மகனை கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். பிறகு தன்னுடைய மகனின் உடல்நிலையில் சில மாற்றங்கள் தெரிய தொடங்கியதும் தன்னுடைய மகனின் நிலைமை இனி எந்த குழந்தைகளுக்கும் வரக்கூடாது என்பதற்காக அந்த ஊரிலேயே ஒரு பெரிய மருத்துவமனையை நெப்போலியன் கட்டியிருக்கிறார்.
பிறகு தன்னுடைய மகனை அமெரிக்காவுக்கு பல போராட்டங்களுக்குப் பிறகு அழைத்து சென்ற நெப்போலியன் அங்கு பிசினஸ் செய்து வருகிறார். அதோடு விவசாயத்தையும் செய்து வருகிறார். அது குறித்து நெப்போலியன் கூறுகையில் என்னுடைய மகனின் மனநிலை மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் நாடு விட்டு நாடு வந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் நெப்போலியனின் மகனின் நிச்சயதார்த்தத்திற்காக சில தினங்களுக்கு முன்பு அவர் சென்னையில் நேரடியாக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து அவருக்கு நிச்சயதார்த்த பத்திரிக்கையை கொடுத்திருந்தார். அதுபோல தன்னுடைய மகன் அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்ய போகிறார் என்ற மகிழ்ச்சி செய்தியையும் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய வருங்கால மனைவியோடு தான் இருக்கும் புகைப்படங்களை தனுஷ் பதிவிடவில்லை. தன்னுடைய தம்பி குணா மற்றும் தன்னுடைய அம்மா உடன் இருக்கும் புகைப்படங்களை அதில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த பதிவிற்கு, “வெளியில் அழகான தோற்றம் வாழ்க்கையை மாற்றாது, உள்ளே நன்றாக உணரும் வாழ்க்கையை உருவாக்குங்கள்... எனக்கு நிச்சயதார்த்தம்! ” என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதிலும் விஜய் டிவி பிரபலமான டிஜே பிளாக் வாழ்த்துக்கள் தம்பி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அதுபோல யூடியூபராகவும் குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளராகவும் இருக்கும் இர்ஃபான் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இர்ஃபான் அடிக்கடி நெப்போலியன் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தோடு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல பல ரசிகர்களும் தனுஷுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதிலும் அதிகமானோர் தனுஷ் அவருடைய வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கலாம் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். தன்னுடைய வருங்கால மனைவியை திருமணத்தின் போது தான் தனுஷ் அறிமுகப்படுத்துவார் போல... நாமும் நம்முடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்ளலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications