ஜப்பானில் ஜாம் ஜாம்னு நடந்த மகன் திருமணம்.. மகிழ்ச்சியில் கண்கலங்கிய நெப்போலியன்! குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கு இன்று ஜப்பானில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த திருமணத்தில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் வெளியிட்டு வருகிறார்கள். அதில் தன்னுடைய மகனுக்கு திருமணம் நடந்தபோது மகிழ்ச்சியில் நெப்போலியன் கண்கலங்கி இருக்கிறார்.
நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் தனுஷ்க்கு தசை சிதைவு நோய் நான்கு வயதிலேயே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்காக பல சிகிச்சைகள் எடுத்துப் பார்த்தார்.

ஆனாலும் அதில் அவர் முழுமையாக குணமடையாத நிலையில் தன்னுடைய மகனைப் போல சதை சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருநெல்வேலியில் ஒரு மையோபதி மருத்துவமனையை கட்டி வைத்திருக்கிறார். இதில் பல நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து மருத்துவம் பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தன்னுடைய மூத்த மகனுக்கு 24 வயது ஆகும் நிலையில் அவருக்கு திருமணம் செய்வதற்காக திருநெல்வேலி மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு வீடியோ காலில் எங்கேஜ்மென்ட் செய்திருந்தார். நெப்போலியன் குடும்பத்தினர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர்.
நெப்போலியன் மகனுக்கு பிளைட்டில் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும் நிலையில் அவரால் உடனே தமிழகத்திற்கு வர முடியாததால் வீடியோ காலில் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதற்கு பிறகு நெப்போலியன் மகன் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக காணப்பட்டது. அதில் சிலர் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தாலும் ஒரு சிலர் விமர்சனம் செய்து வந்தனர்.
அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நெப்போலியன் தன்னுடைய மகனின் சந்தோஷத்திற்காக திருமண ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து இருந்தார். நெப்போலியன் குடும்பத்தினர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும் ஜப்பானில் தான் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தார்.
அதற்காக பல பிரபலங்களுக்கும் நேரில் சென்று பத்திரிக்கை கொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று ஜப்பானில் தன்னுடைய மகனின் திருமணம் நடத்தி இருக்கிறார். இதில் சரத்குமார், ராதிகா, குஷ்பூ, மீனா உட்பட பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் மிக சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. அப்போது தன்னுடைய கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் நெப்போலியன் குடும்பத்தினர் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதில் ஒரு சில இடங்களில் நெப்போலியன் மகிழ்ச்சியில் கண் கலங்கி இருக்கிறார்.
நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலில் முக்கிய பிரபலமாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார். இப்போது அவர் ஆசைப்பட்டபடியே தன்னுடைய மகன் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதை பார்த்து அவரும் சந்தோஷமாக இருக்கிறார். இந்த அழகான தருணத்தை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications