நெப்போலியன் மகன் கல்யாணத்திற்காக ஜப்பான் போன சரத்குமார் குடும்பம்.. ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ்க்கு வரும் நவம்பர் 7ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. ஜப்பானில் இந்த திருமணம் நடக்கும் நிலையில் அங்கு நடிகர் சரத்குமார் அவருடைய குடும்பத்தோடு சென்றிருக்கிறார். அப்போது எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ந்து இருக்கிறார்.
நடிகர் நெப்போலியன் பல வருடங்களாகவே சினிமாவில் இருக்கிறார். புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாக வில்லனாக சினிமாவில் அறிமுகமான நெப்போலியன் அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்கள் தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தார்.

சின்ன வயதிலேயே வயதான வில்லன் கேரக்டரில் தான் இவர் அதிகமாக நடித்திருந்தார். இவருக்கு 24 வயது இருக்கும் போதே 60 வயது நபராகத்தான் இவர் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களில் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி விட்டார். எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்கள் இப்போதும் இவருக்கு பெயர் சொல்லும் படங்களாக இருக்கிறது.
சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் அரசியல் பிரமுகராகவும் இவர் இருந்திருக்கிறார். எம்எல்ஏவாக தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியவர் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.
சினிமா, அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகனுக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தன்னுடைய மகன் ஆசைப்பட்டதால் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு இப்போது ஐடி பிசினஸ் செய்து வருகிறார்.

அதுபோல இயற்கை விவசாயமும் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு 24 வயதாகும் நிலையில் இப்போது அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து இருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த மூலைக்கரைப்பட்டி சேர்ந்த பொண்ணுடன் தான் வீடியோ கால் மூலமாக தன்னுடைய மகனுக்கு எங்கேஜ்மென்ட் செய்திருந்தார்.
தன்னுடைய மகனால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதாலும் அவரால் அமெரிக்காவில் இருந்து கடல் வழியில் பயணம் செய்து ஒரு மாதத்திற்குள் அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு வர முடியாது என்பதால் ஜப்பானில் வைத்து திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்.
நெப்போலியனின் மகன் திருமணம் ஜப்பானில் நடக்கும் நிலையில் கடந்த மாதமே அமெரிக்காவிலிருந்து தன்னுடைய குடும்பத்தோடு ஜப்பானுக்கு நெப்போலியன் கிளம்பி இருந்தார். தொடர்ச்சியாக தன்னுடைய பயண வீடியோக்களை நெப்போலியன் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தன்னுடைய மகனுக்கு திருமணம் நடத்த இருக்கிறார். இதற்காக பல திரை பிரபலங்களும் ஜப்பான் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். நடிகை குஷ்பூ, கலா மாஸ்டர், மீனா போன்றோர் ஏற்கனவே ஜப்பான் சென்ற புகைப்படங்களை பகிர்ந்து இருந்தனர்.
இவர்களை தொடர்ந்து நடிகர் சரத்குமார் தன்னுடைய மனைவி ராதிகா மற்றும் மகன் உடன் ஜப்பானுக்கு சென்று இருக்கிறார். அப்போது தன்னை ஏர்போர்ட்டுக்கு வந்து வரவேற்பதற்காக தன்னுடைய நண்பன் நெப்போலியன் வந்த தகவலையும் அந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார்.
தன்னுடைய நண்பனோடு தனக்கு பல வருட நட்பு இருக்கிறது, நட்பை பேணும் நெப்போலியன் வீட்டு பங்க்ஷனில் நாங்க குடும்பத்தோடு கலந்து கொள்ள போறோம் என்று சரத்குமார் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். அதோடு நெப்போலியனோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவிற்கு மீசக்கார நண்பா உனக்கு பாசம் அதிகம் டா என்று இவர்கள் இருவருக்கும் செட் ஆகுற மாதிரியே சரத்குமாரின் பாடலையும் எடிட் செய்து வைத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கமெண்டுகளை பெற்று வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications