அடுத்த மாசம் கல்யாணம்.. இப்போ திடீரென நெப்போலியன் மகன் வெளியிட்ட பதிவு.. இவ்வளவு செலவா?
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு அடுத்த மாதம் நவம்பரில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக ஜப்பானுக்கு இந்த வாரம் முழுக்க அமெரிக்காவில் இருந்து பயணம் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் புது பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் நெப்போலியன் பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாக வில்லனாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். 27 வயதில் நடிக்க தொடங்கிய நெப்போலியன் அவருடைய ஆரம்பகால சினிமாவில் அதிகமாக வயதான வில்லன் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். அதனாலேயே குறைந்த வயதில் அதிக வயது போல வேடம் போட்டு நடித்தது இவராகத்தான் இருக்கும்.

அதிலும் இவர் நடிப்பில் வெளியான எஜமான் படத்தை இப்போதுள்ள ரசிகர்கள் வரைக்கும் மறந்து இருக்க மாட்டார்கள். அந்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அவரை விட அதிக வயது போல தான் வேஷம் போட்டு நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் இவர் கதாநாயகனாக எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல இவர் நடிகர் ஆவதற்கு முன்பே அரசியலில் முக்கிய பிரமுகராகத்தான் இருந்திருக்கிறார்.
14 வயதிலேயே தன்னுடைய மாமா கே எம் நேருவிற்கு உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். அதற்குப் பிறகு சினிமாவிலும் நடித்துக் கொண்டு எம்எல்ஏவாக போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். ஆனால் தன்னுடைய மூத்த மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய ஆசைக்காக தன்னுடைய சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகி இப்போது குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்கு திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரை பட்டியை சேர்ந்த பெண்ணோடு எங்கேஜ்மென்ட்டை வீடியோ காலில் நடத்தி வைத்திருந்தார். தன்னுடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரால் விமானத்தில் இந்தியாவிற்கு கிளம்பி வர முடியாது என்பதால் திருமணத்தை ஜப்பானில் வைத்து நடத்துவதற்கு முடிவு செய்து இருக்கிறார்.
மணப்பெண்ணின் குடும்பத்தினரும் ஜப்பானுக்கு வரவழைக்கப்பட்டு அங்கு வைத்து திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே நெப்போலியன் தொடங்கி இருக்கிறார். அமெரிக்காவில் தன்னுடைய மகனின் திருமணத்தை நடத்துவதில் குடியுரிமை சிக்கல் வரும் என்பதற்காக ஜப்பானில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்த நெப்போலியன் தன்னுடைய மகன் மற்றும் குடும்பத்தோடு செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே கப்பலில் பயணத்தை தொடங்கிவிட்டார்.
சில இடங்களில் கப்பலிலும் சில இடங்களில் ட்ரெயினிலும் ஒரு மாதமாக பயணித்து இப்போது ஜப்பான் வந்தடைந்து இருக்கிறார்கள். நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஜப்பானுக்கு வந்த மூன்றாவது நாள் என்று அங்கு எடுத்த வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதுபோல அமெரிக்காவில் இருந்து ஜப்பான் நோக்கி பயணத்தை தொடங்கிய முதல் நாளிலிருந்து நெப்போலியன் தொடர்ச்சியாக தாங்கள் போகும் இடங்கள் பற்றிய வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இதை பார்க்கும் போது அம்பானியை விட நெப்போலியன் தன்னுடைய மகன் கல்யாணத்திற்கு அதிகமாக செலவு செய்திருக்கிறார் போல என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனாலும் தனுஷ் தசை சிதைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இவருக்கு திருமணம் செய்து வைத்து அந்த பெண்ணின் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம் என்று பலர் கருத்து கூறி வந்தனர். ஆனால் இப்போது தனுஷ் வெளியீட்ட வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications