பல நாள் கனவு நிறைவேறியது! நான் ஆசைப்பட்டது கிடைச்சிடுச்சு! நெப்போலியன் மகன் வெளியிட்ட போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பல நாள் கனவு நிறைவேறியது என்று மகிழ்ச்சியான ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கமெண்ட்ஸ் பெற்று வருகிறது.

நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் கடந்த மாதத்தில் நடைபெற்ற நிலையில் இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. நெப்போலியன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அரசியலிலும் முக்கிய பிரபலமாக இருந்தார்.

television napoleon

எம்எல்ஏவாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நெப்போலியன் பிறகு மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருந்தார். ஆனால் தன்னுடைய குடும்பத்திற்காக சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி இப்போது அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு நெப்போலியனின் மகன் எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதை தொடர்ந்து இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. நெப்போலியன் மூத்த மகன் தனுஷிற்கு நான்கு வயதிலிருந்து தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 10 வயதிற்கு பிறகு அவரால் நடக்க முடியவில்லை.

television napoleon

தன்னுடைய மகனின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கும் நெப்போலியன் தன்னுடைய மருமகள் தமிழ்நாட்டில் இருந்து தான் வரவேண்டும் என்று அதற்காக பெண் பார்த்தபோது திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை தன்னுடைய மகனுக்கு பேசி முடித்து இருந்தார்.

இந்த செய்தி வெளியானதும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் இருக்கும் மகனுக்கு நெப்போலியன் திருமணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்கிறார் என்று சிலர் நெகட்டிவாக பேசி வந்தனர். ஒரு சிலர் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு சிறந்த தந்தையாக நல்ல முடிவு எடுத்து இருக்கிறார் என்று பாராட்டி வந்தனர்.

television napoleon

தன்னைப் பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நெப்போலியன் தன்னுடைய மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக ஜப்பானில் நடத்தி முடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு ஜப்பானில் குடும்பத்தோடு சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்.

அடிக்கடி தான் வெளியே செல்லும் இடங்களில் எடுக்கும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் நெப்போலியனின் மகன் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் எனக்கு பொகிமோன் 25வது ஆண்டு விழா பதிப்பு ஜாக்கெட் கிடைத்திருக்கிறது என்று சந்தோஷமாக பகிர்ந்து இருக்கிறார்.

தனுஷ் வீடியோ கேம் பிரியர். அவர் ஆசைப்பட்ட மாதிரி அவருக்கு பொகிமோன் ஜாக்கெட்டை நெப்போலியன் வாங்கி கொடுத்து இருக்கிறார். அதுபோல தனுஷ் தானே சில கேம்களையும் உருவாக்கியிருக்கிறார். அதற்கான படிப்பை தான் தனுஷ் படித்திருக்கிறார். அடிக்கடி வீடியோ கேம் அருங்காட்சியத்திற்கு சென்று அங்கே எடுத்த புகைப்படங்களையும் தனுஷ் பகிர்ந்து இருக்கிறார்.

அதுபோல தனுஷ் ஓவியமும் அழகாக வரைவாராம். தன்னுடைய மனைவிக்கு முதல்முறையாக அவரை வரைந்த ஓவியத்தை தான் கொடுத்திருந்தார். தன்னால் நடக்க முடியவில்லை என்றாலும் தனக்குள் இருக்கும் திறமைகளை அவ்வப்போது வெளிப்படுத்தி சமூக வலைதள பக்கங்களில் தனுஷ் பகிர்ந்து வருகிறார். இது குறித்து அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+