நடிகர் நெப்போலியன் ஞாபகம் இருக்கா? இளைய மகன் வெளிநாட்டில் செய்த சாதனை.. அடடே சூப்பர்
சென்னை: நடிகர் நெப்போலியன் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
நடிகராக மட்டுமல்லாமல் ஒரு அரசியல் பிரமுகராகவும் ஒரு பாடகராகவும் இருந்த இவர் தற்போது தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.
இந்த நிலையில் நெப்போலியன் இளைய மகன் கலிபோர்னியாவில் பட்டம் பெற்று இருக்கிறார். அவருக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 80ஸ் 90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் நடிகராக இருந்திருக்கிறார். இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடிய ஒரு சில பாடல்களும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் அந்த "எட்டு பட்டி ராசாவே" இப்போதும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஒல்லியான தேகத்தோடு பெரிய முறுக்கு மீசை வைத்து மிரட்டும் பார்வையால் இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனவர்கள் ஏராளம். சின்னத்தாயி, ஊர் மரியாதை, எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, தென்காசி பட்டணம், விருமாண்டி என பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம் அவருடைய நடிப்பிற்கு மைல் கல்லாக அமைந்தது.
அந்த காலகட்டத்தில் சரத்குமார், ரஜினிகாந்த்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்துக் கொண்டவர் தான். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கிய நெப்போலியன் திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் தான்.
ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக அரசியலை விட்டு விலகிய நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர் விவசாயத்தையும் செய்து வருகிறார். அதுபோல நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் நெப்போலியனின் இளைய மகன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.
அப்போது தன்னுடைய குடும்பத்தோடு அவர் புகைப்படம் எடுத்து இருக்கிறார். அதை நெப்போலியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் நடிகர் நெப்போலியன் மகனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் உடல் நல குறைவால் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு நான்கு வயது இருக்கும்போது இந்த நோயை கண்டுபிடித்து விட்டவர்களாம். அவர் 10 வயதுக்கு மேல் நடக்க மாட்டார் என்று அப்போது மருத்துவர்கள் சொன்னார்களாம்.அவர்கள் சொன்னபடியே பத்து வயதுக்கு மேல் தனுஷால் நடக்க முடியாமல் போய்விட்டதாம்.
அந்த நேரத்தில் உலகம் முழுவதும் தேடியும் இந்த நோயை குணப்படுத்த மருந்து கிடைக்கவில்லையாம். அப்போது திருநெல்வேலி பக்கத்தில் ஒரு ஊரில் பாரம்பரிய வைத்தியம் மூலம் இதனை படிப்படியாக குணப்படுத்த முடியும் என்று தெரிந்து கொண்டாராம். உடனே தன்னுடைய மகனை அங்கே கூப்பிட்டுக் கொண்டு போன நெப்போலியன் அங்கு தான் சிகிச்சை எடுத்து வந்து இருக்கிறார். அந்த இடத்தில் தன் குழந்தையைப் போல பாதிக்கப்பட்டவர்கள் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொருட்டு ஒரு மருத்துவமனையை நெப்போலியன் கட்டி இருக்கிறாராம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications