நெப்போலியன் மகன் கல்யாணம்.. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. நெகிழ்ந்த பாசம்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் இன்று ஜப்பானில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள முடியவில்லை என்று சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் தனுஷுக்கு சிறுவயதிலே தசை சிதைவு என்ற அரியவகை நோய் இருக்கிறது. இந்த நோய் ஒரு கட்டத்தில் தீவிரமாகி தனுஷால் நடக்க முடியாமல் போய்விட்டது. இதனால் சித்த வைத்தியம் மூலம் தன்னுடைய மகனுக்கு சிகிச்சை அளித்து வந்த நெப்போலியன் தன்னுடைய மகன் விருப்பத்திற்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

தன் மகன் மீது அதிகமான பாசம் வைத்திருக்கும் நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக அவருக்கு பிடித்த யூடியூபர் இர்பானை அமெரிக்கா வீட்டிற்கு அழைத்து தன்னுடைய வீட்டை சுற்றி காட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு பிறகு தான் நெப்போலியன் அன்பு பலருக்கும் தெரியவந்தது.
அதற்கு முன்பு அவர் சினிமாவில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்திருந்தாலும் அவருடைய குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் காதல், பாசம் எல்லாம் அந்த வீடியோவில் எல்லோருக்கும் தெரிய வந்தது. அதோடு தன்னுடைய மகனுக்காக பார்த்து பார்த்து அவர் செய்யும் பல விஷயங்கள் பற்றியும் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, தான் உயிரையே வைத்திருக்கும் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நெப்போலியன் அதற்காக பெண் பார்த்தபோது திருநெல்வேலி மாவட்டத்தின் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரை நெப்போலியன் மகனுக்கு பிடித்திருக்கிறது.
இரு வீட்டாரின் சம்மதத்திற்கு பிறகு இருவரும் போனில் பேசி இருக்கிறார்கள். பிறகு இருவரின் மனமும் ஒத்து போனதும் வீடியோ காலில் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று திருமணம் ஜப்பானில் பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி திரையுலகை சார்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று ஒரு வீடியோவில் வருத்தப்பட்டு நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்டு பேசி இருக்கிறார்.
அதில் நெப்போலியன் சார் நீங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல். என்னுடைய கஷ்டமான காலங்களில் என் கூட இருந்திருக்கீங்க. இந்த நேரத்தில் நான் கல்யாணத்திலிருந்து எல்லா வேலைகளையும் செய்து இருக்கணும். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் வந்து உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன் சார். இந்த நிகழ்வு உங்க மனசு மாதிரி ரொம்ப நல்லா நடக்கட்டும் சார். தனுஷ் தம்பி உங்களுக்கும் என்னுடைய திருமண வாழ்த்துக்கள் என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் பிரபலமடைந்திருக்கும் நிலையில் அவர் தொடர்ச்சியாக இங்கு வேலையில் இருப்பதால் அவரால் ஜப்பானுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்திருக்கலாம். ஆனாலும் மன்னிப்பு கேட்டு அவர் வெளியிட்ட வீடியோ இப்போது பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
-
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications