இன்னும் 3 நாளில் நெப்போலியன் மகனுக்கு திருமணம்.. இப்பவே ஜப்பான் சென்ற நடிகைகள்.. நெகிழ வைத்த தந்தை
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் வரும் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகை மீனா மற்றும் கலா மாஸ்டர் ஜப்பானுக்கு சென்று இருக்கின்றனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் நெப்போலியன் பல திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும், கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் பலருக்கும் பரீட்சையமானவர். அதிலும் எம்எல்ஏவாக தொடங்கி மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஆனால் சமீபத்தில் திரைப்படங்கள் மற்றும் அரசியலை விட்டு விலகி அமெரிக்காவில் குடும்பத்தோடு குடி பெயர்ந்திருக்கிறார். தன்னுடைய மூத்த மகன் தனுஷ்க்கு தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தன்னுடைய மகன் விருப்பத்திற்காக அமெரிக்காவிற்கு சென்று குடும்பத்தோடு வாழ விரும்பிய நிலையில் அங்கு ஐடி பிசினஸ் செய்து வருகிறார்.
அதோடு பல ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயத்தையும் செய்து கொண்டிருக்கிறார். பல தமிழர்களுக்கு தன்னுடைய கம்பெனியில் வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்த நெப்போலியன் தன்னுடைய மூத்த மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.
தன் மகனுக்கு தமிழ்நாட்டை சார்ந்த பெண் தான் மணமுடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நெப்போலியன் அதற்கு முயற்சி செய்திருந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரை பட்டியை சார்ந்த அனுஷ்யா என்ற பெண்ணோடு தன்னுடைய மகனுக்கு என்கேஜ்மென்ட் செய்திருந்தார். பல கோடி சொத்துகளுக்கு வாரிசாக வரப்போகும் அனுஷ்யா தான் இனி தன்னுடைய வீட்டில் வாரிசு என்று அவருடைய என்கேஜ்மென்டில் அறிவித்திருந்தார்.

அதோடு என்கேஜ்மென்ட் வீடியோ காலில் தான் நடைபெற்றது. நெப்போலியனும் அவருடைய மனைவியும் மட்டும் மணப்பெண் வீட்டிற்கு வந்து தட்டு தாம்பூலம் மாற்றி இருந்தனர். மாப்பிள்ளை அமெரிக்காவில் தான் இருந்தார். காரணம் அவருக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் மாப்பிள்ளை வரவில்லை.
அதேபோல சில மாதங்களுக்கும் முன்பே எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்தாலும் ஏப்ரல் ஏழாம் தேதி திருமணம் நடத்துவதற்கு முடிவு செய்திருந்தனர். ஆனால் நெப்போலியன் குடும்பத்தினர் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருப்பதால் அங்கு வைத்து திருமணத்தை செய்யும்போது சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்பதால் அமெரிக்காவின் பக்கத்தில் இருக்கும் ஜப்பானில் வைத்து திருமணத்தை நடத்துவதற்கு முடிவு செய்திருந்தனர்.

அதற்காக கடந்த மாதத்திலேயே நெப்போலியன் குடும்பத்தினர் கப்பல் வழியாக பயணத்தை தொடங்கி இருந்தனர் சில வாரங்களுக்கு முன்பு நெப்போலியன் குடும்பத்தினர் ஜப்பான் வந்து சேர்ந்து விட்டனர். அதை தினமும் வீடியோவாக நெப்போலியன் மற்றும் அவருடைய மகன் தனுஷ் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் தனுஷ் திருமணத்திற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நடிகை மீனா மற்றும் கலா மாஸ்டர் நெப்போலியன் மகன் திருமணத்திற்காக ஒரு வாரத்திற்கு முன்பே ஜப்பான் சென்று இருக்கிறார்கள். அப்போது அவர்களை நெப்போலியன் ஏர்போர்ட்டில் சென்று வரவேற்று இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கலா மாஸ்டர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெப்போலியனை பாராட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications