நெப்போலியன் மகன் கல்யாணத்தில் 70 வகை விருந்து.. வெளியே தெரியாமல் 4 மாசமாக நடந்த ஏற்பாடு
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் இன்று ஜப்பானில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு 70 வகையான விருந்து பரிமாறப்பட்டிருக்கிறது. அதோடு திருமண ஏற்பாடுகள் குறித்தும் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு இன்று பிரம்மாண்டமாக ஜப்பானில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. காலையில் இருந்து சமூக வலைத்தளத்தில் நெப்போலியன் மகன் தனுஷ் திருமண புகைப்படங்கள் தான் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

நெப்போலியனின் மகனுக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் அவருக்கு ஒரு வாழ்க்கை துணை தேவை என்று அதற்காக பல இடங்களில் தேடி திருநெல்வேலி பெண்ணை தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். இதை பலர் பாராட்டி வருகிறார்கள். சிலர் விமர்சித்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் திருமண பங்க்ஷனை நெப்போலியன் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல சிறப்பான செயல்களை பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு செய்திருக்கிறார்.
நெப்போலியனின் மகன் திருமணத்தில் 70 வகையான சாப்பாடு பரிமாறப்பட்டதாம். அதோடு வாழை இழை முதல் கல் உப்பு, மஞ்சள், நெய் என எல்லா பொருட்களும் பல இடங்களில் இருந்து ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்டதாம். சாப்பாடில் எந்த குறையும் வந்து விடக்கூடாது என்று நெப்போலியன் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டாராம்.
அதுபோல ஆரம்பத்தில் ஜப்பானுக்கு நெப்போலியன் குடும்பத்தினர் சுற்றுலா வருவதற்காக தான் திட்டமிட்டு இருந்தார்களாம். கடைசி நேரத்தில் தான் தன்னுடைய மகனுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டதால் ஜப்பானில் திருமணத்தை நடத்திவிடலாம் என்று முடிவை மாற்றி இருக்கிறார்கள்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே ஜப்பானுக்கு போக வேண்டும் என்று நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் சொல்லிக் கொண்டே இருந்தாராம். அதனால் குடும்பத்தோடு சென்று ஜப்பானில் சில வாரங்கள் தங்க வேண்டும் என்று தான் முதலில் பேசி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் மணப்பெண்ணான அக்ஷயாவின் வரன் நெப்போலியன் குடும்பத்தினர் இடம் வந்திருக்கிறது.

பிறகு திருமணத்திற்கு ஏற்பாடுகளும் நடந்து இருக்கிறது. அதிலும் முதலில் திருமணத்தை அமெரிக்காவில் செய்துவிடலாம் என்று நெப்போலியன் சொல்ல அதற்கு தனுஷ் மறுத்துவிட்டதால் தான் திருமணம் ஜப்பானில் நடைபெற்றது. ஜப்பானில் திருமணத்திற்கு முடிவு செய்யப்பட்டதுமே ஜப்பானில் சாப்பாடு அரேஞ் செய்த நபருக்கு நெப்போலியன் போன் செய்து பேசியிருக்கிறார்.
அப்போது நெப்போலியன் கண்கலங்கி அழுது விட்டாராம். என்னுடைய மகனின் கனவை நான் நிறைவேற்ற போகிறேன் அது நல்லபடியா நடக்க வேண்டும் என்று அவர் சொல்ல, எனக்கும் அழுகை வந்துவிட்டது என்றும் கேட்டரிங் அரேஞ்ச் செய்த நபர் பிஹைன் வுட்ஸ் youtube சேனலில் பேட்டி அளித்திருக்கிறார்.
அதோடு தனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்பதால் நானும் நெப்போலியன் பீலிங்கை புரிந்து கொண்டேன். இந்த திருமணத்தில் சாப்பாடு பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று எல்லாமே பார்த்து பார்த்து செய்தேன். அது வந்த எல்லோருக்கும் பிடித்திருந்தது என்று அவரும் எமோஷனலாக பேசி இருக்கிறார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications