5 வருஷம் கழிச்சு பிறந்த மகன்.. அந்த குறை இருந்தது! ஆனால் சஷ்டியில் நடந்த அதிசயம்- நெப்போலியன் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியனின் மனைவி தன்னுடைய மூத்த மகன் தனுஷ் தனக்கு திருமணத்திற்கு பிறகு 5 வருடம் கழித்து பிறந்தார் என்றும், தற்போது தன்னுடைய வாழ்க்கையில் சஷ்டி அன்று நடந்த சந்தோஷமான நிகழ்வு குறித்தும் பேசி இருக்கிறார்.

இணையத்தை திறந்தாலே சில தினங்களாக நெப்போலியன் வீட்டு திருமண செய்திதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் நெப்போலியன் 15 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் குடி பெயர்ந்து விட்டார். சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி அமெரிக்காவில் ஐடி பிசினஸ் செய்து வரும் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷ்க்கு ஜப்பானில் திருமணம் செய்து இருக்கிறார்.

napoleon

மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு திருநெல்வேலியை சார்ந்த பெண்ணோடு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தை பலர் பாராட்டுகிறார்கள். சிலர் விமர்சிக்கிறார்கள். இந்த நிலையில் தனுஷ் குறித்து அவருடைய அம்மா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில், என்னுடைய கல்யாணத்திற்கு பிறகு நான் என்னுடைய கணவரோடு சூட்டிங்கிற்க்கு சென்று விடுவேன். அவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கு நானும் பயணித்துக் கொண்டே இருந்தேன். தொடர்ச்சியாக இப்படி பயணம் செய்ததால் எனக்கு மூன்று முறை அபார்ஷன் ஆகிவிட்டது.

அதற்கு பிறகு நான்காவது முறை கர்ப்பமாக வேண்டும் என்றால் முழுமையாக ஓய்வில் இருந்தால்தான் முடியும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். அதனால் நான் இரண்டு வருடம் ரெஸ்ட்டில் இருந்தேன். அந்த நேரத்தில் தான் என்னுடைய மகன் பிறந்தார். எங்களுக்கு கல்யாணம் முடிந்து ஐந்தாவது வருடத்தில் என்னுடைய மகன் பிறந்தான். மகன் பிறந்த போது அந்த மருத்துவமனையில் பெரிய அளவில் பிரமாண்டமாக கொண்டாடினோம்.

எல்லோரும் சந்தோஷமாக இருந்தோம். எனக்கு என்னுடைய மகன் ரொம்பவும் ஸ்பெஷல். அவருக்கு நான்கு வயது தசைசிதைவு நோய் பாதிப்பு ஏற்பட தொடங்கியது. அப்போது தொடங்கி நாங்கள் அந்த நோய்க்குறித்து பல வித ஆராய்ச்சிகள் செய்தோம். அதிகமாக விசாரித்துக் கொண்டே இருந்தோம். ஆனாலும் பத்து வயதுக்கு பிறகு அவரால் நடக்க முடியாமல் ஆகிவிட்டது.

அவருடைய உடல் நிலையை குறித்து நான் தான் அதிகமாக பயப்படுவேன். ஆனால் என்னுடைய மகன் எப்போதும் தைரியமாக இருப்பார். டாக்டர்கள் கூட அப்படி இப்படி என்று ஏதாவது பயங்கரமா சொன்னால் கூட அப்படி எல்லாம் எதுவும் ஆகாது என்று என்னுடைய மகன் பேசுவார். அவருடைய தைரியத்தால் தான் நாங்களும் நிம்மதியாக இருக்கிறோம்.

napoleon

இப்போது நான் ஆசைப்பட்ட மாதிரியே என் மகனுக்கு கல்யாணம் முடிந்துவிட்டது. கடந்த சஷ்டி அன்று என்னுடைய மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று நான் காலையில் இருந்து சாப்பிடாமல் விரதம் இருந்தேன். ஆனால் இந்த சஷ்டி அன்று என்னுடைய மகனுக்கு திருமணம் முடிந்து விட்டது.

இது எனக்கு பெரிய அதிசயமாக இருக்கிறது. என் மகனின் திருமணத்தின் போது கூட நான் பகல் முழுக்க சாப்பிடவில்லை. எல்லோரும் கல்யாணம் தான் முடிந்து விட்டதே இன்னைக்கு கூட நீங்க விரதம் இருக்கணுமான்னு கேட்டாங்க. ஆனால் நான் கண்டிப்பா இருப்பேன் என்னுடைய மகன் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்று சொல்லி இந்த விரதத்தை முடித்தேன்.

இப்போ நான் ரொம்ப நிம்மதியா இருக்கிறேன். எனக்கு தங்கம் போன்ற ஒரு மருமகள் கிடைத்திருக்கிறார். அவர் என்னுடைய மகன் மீது அதிகமான பாசம் வைத்திருக்கிறார். இது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+