மூக்கு புடைப்பா வந்து நின்ற நாசர்.. வியந்த பாலச்சந்தர்! அவசர அவசரமாக ஓடிவந்த விஜய்: நெகிழும் பிரபலம்
சென்னை: எதிர்கூடாரத்திலிருந்த கமல்ஹாசன், நாசரை அரவணைத்து கொண்டார். தேவர் மகனில் தனக்கு இணையான கேரக்டரிலும், மகளிர் மட்டும் படத்தில் ஹீரோவாகவும் நாசரை நடிக்க வைத்தார்.. தான் நடிக்கும் படங்களிலும் ஒரு கேரக்டர், நாசருக்கு கமல் ஒதுக்கிவிடுவார். நாசர் அற்புதமான மனிதர், எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "ஒரு நடிகனுக்கு உடல்மொழி மிகவும் முக்கியம்.. அலட்டிக்கொள்ளாமல் நடிப்பது அதைவிட முக்கியம்.. அந்த காலத்தில் நடிகர் ரங்காராவ் இப்படித்தான் நடித்தார். அதுபோன்று மிகச்சிறந்த உதாரணம் நடிகர் நாசர்..

டைரக்டர் படங்கள்
செங்கல்பட்டிலிருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் நாசர்.. எல்லாரும் கமர்ஷியல் ஹீரோக்கள் படங்களை நோக்கி சென்றபோது,நாசரும், அவருடைய நணபர்களும் "டைரக்டர் படங்களை" தேடி செல்வார்களாம்.. அந்த வகையில், பாலச்சந்தர் போன்றோரின் சினிமாக்கள், இலக்கியம் சார்ந்த சினிமாக்களை தேடி சென்றிருக்கிறார்கள். தன்னை தனித்துவமான அடையாளமாக மாற்றிக் கொண்டு, மாற்று சினிமாவை நோக்கி பயணித்தவர் நாசர்.
உலக சினிமாக்களை பார்ப்பது என்பதே அந்த காலத்தில் கடினமான விஷயம்.. இதற்காகவே செங்கல்பட்டிலிருந்து வந்து உலக சினிமாக்களை பார்த்தவர் நாசர்.. எந்நேரமும் மாற்று சிந்தனையை திரைப்படத்தில் செலுத்தினார். ஆங்கில புலமை சரளமாக இருந்ததால், தாஜ் ஓட்டலில் பணிபுரிந்தார்.. ஓட்டலில் வேலை பார்க்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் சினிமா வாய்ப்புகளை தேடி அலைந்துள்ளார்..
கவிதாலயா அலுவலகம்
பிலிம் இன்ஸ்டிடியூடில் சேர்ந்தால் எளிதாக சினிமாவில் நுழையலாம் என்று நண்பர்கள் ஆலோசனை சொல்லவும், அடையாறில் திரைப்படக்கல்லூரியில் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தார்.. படிப்பை முடித்தும்கூட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதனால், மறுபடியும் ஓட்டலிலேயே வேலைக்கு சேர்ந்தார். ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியிலிருந்து, மயிலாப்பூரிலுள்ள பாலச்சந்தரின் கவிதாலயா அலுவலகத்துக்கு நடந்தே சென்று வாப்ப்பு கேட்டார்.
அந்த அலுவலகத்தில் எல்லாரும் நாசரின் மூக்கை வித்தியாசமாக பார்த்துள்ளனர்.. பாலச்சந்தரின் வலதுகரம் அனந்து சாரும், நாசரின மூக்கை ஆச்சரியத்துடன் பார்த்தாராம்.. பிறகு பாலச்சந்தரை நேரில் சந்தித்தபோது, நடிப்பியா ? என்று கேட்டு, ஒரு சீன் நடிக்க சொன்னாராம்.
நாசரின் மூக்கு
பாலச்சந்தருக்கும் நாசரின் மூக்கு தான் வித்தியாசமாக தெரிந்துள்ளது.. பிறகு என்ன படங்கள் பார்ப்பாய்? என்று கேட்டதற்கு ஐரோப்பா உள்ளிட்ட உலக படங்களை பார்த்துள்ளதாக நாசர் சொல்லி உள்ளார்.. நாசரின் சினிமா ஈடுபாட்டை கண்டு வியந்த பாலச்சந்தர், கல்யாண அகதிகள் என்ற படத்தில், ஒய்.விஜயாவுக்கு குடிகார கணவராக நடிக்க வைத்தார்.
ஆனால் நாசருக்கு அடையாளம் தந்தது ரஜினியுடன் நடித்த வேலைக்காரன் படம்தான்.. அந்த படத்தில் தன்னைவிட நாசர் ஸ்கோர் செய்திருந்ததை ரஜினி கவனித்துள்ளார். பிறகு நாசரின் சில சீன்களை எடிட்டிங்கில் வெட்டிவிட்டார்களாம்.
அரவணைத்து கொண்ட கமல்
இதற்கு பிறகுதான் எதிர்கூடாரத்திலிருந்த கமல், நாசரை அரவணைத்து கொண்டார். தேவர் மகனில் தனக்கு இணையான கேரக்டரிலும், மகளிர் மட்டும் படத்தில் ஹீரோவாகவும் நாசரை நடிக்க வைத்தார்.. தான் நடிக்கும் படங்களிலும் ஒரு கேரக்டர், நாசருக்கு கமல் ஒதுக்கிவிடுவார். நாசர் அற்புதமான மனிதர், எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்.
விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங்கில் நாசர் நடித்து கொண்டிருந்தபோது, மகாபலிபுரம் சாலையில் நடந்த விபத்தில் நாசரின் மகன் சிக்கி கொண்டார்.. கோமா வரை சென்றபோது மருத்துவமனையில், விஜய் என்ற பெயரை முணுமுணுத்துள்ளார்.. முதலில் எந்த விஜய் என்று நாசருக்கு புரியவில்லையாம். பிறகுதான் நடிகர் விஜய் என்பது தெரிந்துள்ளது.
பிறந்தநாள் விழா
நாசரின் மகன் மிகப்பெரிய விஜய்யின் ரசிகராம்.. மருத்துவமனையில் கோமா நிலைமையிலும் விஜய் பெயரை உச்சரித்துள்ளார். உடனே நாசர், வெளியூர் ஷூட்டிங்கில் இருந்த விஜய்யிடம் விஷயத்தை போனில் சொல்லவும், இதைக்கேட்டு விஜய் நெகிழ்ந்து போய்விட்டாராம்.
உடனே அவுட்டோரிலிருந்து விஜய், அவசர அவசரமாக மருத்துவமனைக்கு வந்து நாசர் மகனை பார்த்துள்ளார்.. உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்தபிறகும்கூட 2 முறை சென்று பார்த்தார். நாசர் மகனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சென்னையில் இருந்தால், நேரடியாக நாசர் வீட்டுக்கு, அவரது மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வார். வெளியூரில் இருந்தால் போன் செய்தாவது விஜய் வாழ்த்து சொல்லிவிடுவார்" என்று தெரிவித்துள்ளார்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications