AI வேண்டாம் நான் OI-ல பண்ண விஷயம் இருக்கு.. டபுள் மீனிங்கில் பேசிய நடிகர் நாசர்.. எஸ்ஜே சூர்யா கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: நாசர் என்றாலே தமிழ் சினிமாவில் முதலில் நினைவுக்கு வருவது அவருடைய நடிப்புதான். வில்லன் என்றால் மிரட்டல், ஹீரோ என்றால் கம்பீரம், குணசித்திர கதாபாத்திரம் என்றால் கதைக்கே உயிர் கொடுக்கும் நடிப்பு என பலவிதமான கேரக்டர்களில் நாசரை பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசிய விதம் தான் இப்போது சோசியல் மீடியாவில் செம வைரல்.
நாசர் அந்த நிகழ்ச்சியில் சினிமாவில் இப்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தை பற்றி ஒரு சம்பவத்தை பகிர்ந்திருந்தார். நான் ஒரு படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஒருவர் என்னிடம் வந்து சார் நீங்க சின்ன வயதில் இருப்பது போன்று சில காட்சிகள் நாங்கள் எடுக்க வேண்டும் அதற்காக AI பயன்படுத்த போகிறோம் என்று சொன்னார். உடனே நான் AI வேண்டாம் நான் OI-ல செய்த ஒரு விஷயம் இருக்கிறது என்று நாசர் சொன்னதும் அரங்கமே சிரிப்பில் அதிர்ந்து இருந்தது.
நாசர் கொடுத்த விளக்கம்
அதற்குப் பிறகு நாசர் சொன்னது இன்னும் ட்விஸ்ட். நான் OI என்று சொன்னது Original Intelligent என்னுடைய சொந்த மகனை தான் சொன்னேன். என்னுடைய 2வது மகன் என்னை போலவே இருப்பான். அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீங்கன்னா அவன் அந்த கேரக்டரில் நடிப்பான் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அவ்வளவு தான் ஒரிஜினல் இன்டெலிஜென்ட் என்ற விளக்கத்தை கொடுத்ததும் எஸ் ஜே சூர்யா உட்பட அங்கிருந்து அனைவரும் கைதட்டி விழுந்து விழுந்து சிரித்தனர்.

நாசரின் ஹிட் படங்கள்
நாசரை இப்படி காமெடி டைமிங்கில் பார்ப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் புதுசாகத் தான் இருக்கிறது. நாயகன், வேலைக்காரன், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ரோஜா, பம்பாய், குருதி புனல், ஜீன்ஸ், படையப்பா என ஆரம்ப காலத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தவர் நாசர். குறிப்பாக நாயகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் கொடுத்த நடிப்பு அவரை சினிமாவின் தனியாக கவனிக்க வைத்தது.
நெட்டிசன்களின் ரியாக்சன்
நடிப்போடு மட்டும் நின்றுவிடாமல் இயக்குனராகவும் களமிறங்கியவர். அவதாரம், தேவதை, மாயன், பாப்கான் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர் என சினிமாவில் பல துறைகளிலும் வேலை பார்த்த அனுபவம் நாசருக்கு இருக்கிறது. நாசரை இத்தனை வருஷம் சீரியஸான நடிகராக பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படி டபுள் மீனிங் கலந்த காமெடியில் இவ்வளவு கூலாக சமாளிப்பார் என்று எதிர்பார்க்கலையே என்பதுதான் தற்போது நெட்டிசன்களின் ரியாக்ஷன்.


Click it and Unblock the Notifications
