கடவுள் கொடுக்கிறாங்க அதை நாம அப்படியே ஏத்துக்கணும்.. குழந்தை விஷயத்தில் நவீன்,கண்மணி பதில்
செய்தி வாசிப்பாளர்கள் கண்மணி கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய கணவரோடு ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: கலர்ஸ் தமிழில் இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகனாக நடித்த நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்திருந்தார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கண்மணி சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
புகைப்படத்தில் கண்மணியின் வயிறு பெரியதாக இருப்பதை வைத்து ரசிகர்கள் பலர் கண்மணி கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
முதல் முறையாக தாங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களோடு கண்மணி மற்றும் நவீன் இருவரும் பகிர்ந்து இருக்கின்றனர்.

செய்தி வாசிப்பாளர்
வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகளின் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளராக இருந்தாலும் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் கண்மணி. இவர் ஆரம்பத்தில் ஜெயா டிவியில் தான் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். நியூஸ் 18,காவேரி போன்ற பல தொலைக்காட்சிகளில் இவர் பணிபுரிந்து இருந்தாலும் தற்போது சன் டிவியில் செய்தி வாசித்து வருகிறார். இவருக்கு சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்த பிறகும் அதில் எல்லாம் தனக்கு ஆசை இல்லை என்று கூறி செய்தி வாசிப்பில் தங்களது கவனத்தை தேடி செலுத்தி வருகிறார்.

இதயத்தை திருடாதே சிவா
இந்த நிலையில் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் நவீனை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் நவீன் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு இதயத்தை திருடாதே சீரியலில் சிவா என்கிற கேரக்டர் அதிகமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது. இந்த கேரக்டர் மூலமாகவே இப்ப வரைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்து இருந்தாலும் பலர் இவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திருமணம்
இந்த நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள விஜயாபார்க்கில் நவீன் மற்றும் கண்மணியின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. இவர்களின் திருமணம் ஜூன் மாதம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் என்று செய்திகள் வெளியான நிலையில் அதுவெல்லாம் இல்லை இது வீட்டில் பார்த்த திருமணம் தான் என்று ஏற்கனவே இவர்கள் இருவரும் விளக்கம் கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

மறைத்து வைத்த ரகசியம்
சமீபத்தில் நவீன் மற்றும் கண்மணி இருவரும் காபி ஷாப்பில் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தனர். அதில் கண்மணியின் வயிறு பெரியதாக இருப்பதை கண்ட ரசிகர்கள் பலர் கண்மணி கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்வியை எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் தங்களுடைய youtube பக்கத்தில் இதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கின்றனர். அதில் நாங்க இதை சர்ப்ரைஸ் ஆக வச்சிருக்கணும்னு தான் நினைச்சிருந்தோம். மண்டையில் உள்ள கொண்டையை மறந்துட்டோம் என்கிற மாதிரி சலூனின் எடுத்து வீடியோவை பதிவிடும்போது, நாங்கள் இதை கொஞ்சமும் கவனிக்கல. அதனால பலரும் எங்க கிட்ட கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனாலதான் சரி நம்ம ஃபேமிலி கிட்ட இத சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டோம். கடவுள் கொடுக்குறாங்க அதை நாம அப்படியே ஏத்துக்கணும் என்று கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவந்து வருகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications