நேத்ரன் கூட பிறந்தவங்க 11 பேரு.. சாப்பாட்டுல கை வைத்த போது சொன்ன அந்த வார்த்தை.. தீபா உருக்கம்
சென்னை: சீரியல் நடிகர் நேத்ரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மனைவியான தீபா நேத்ரன் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அண்ணனாக நடித்து வந்த நேத்ரன் பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்லாமல் பொன்னி சீரியல் உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிகமான சீரியல்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்த நிலையில் உடல் நிலை குறைபாடு காரணமாக சீரியலில் இருந்து விலகி இருந்தார்.

நேத்ரனுக்கு நான்கு வருடங்களாகவே வயிறு வலி பிரச்சனை இருந்திருக்கிறது. அதை பெரிதாக எடுக்காமல் ஹோமியோபதி மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் வயிறு வலி அதிகமான பிறகு ஸ்கேன் எடுத்து பார்க்கும்போது தான் அவருக்கு புற்றுநோய் நான்காவது கட்டத்தில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது.
புற்றுநோய் என்று தெரிந்ததும் உடனே ஆபரேஷன் செய்திருந்தார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். நேத்ரன் சீரியல் நடிகையான தீபாவை தான் காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேத்ரன் மறைவிற்குப் பிறகு முதல் முறையாக அவருடைய மனைவி தீபா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நேத்ரனுக்கு கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்று கண் கலங்க பேசி இருக்கிறார். அதில், நேத்ரன் கூட பிறந்தவர்கள் 11 பேர். எனக்கு ஆறு நாத்தனார் இருக்கிறார்கள். ஆனாலும் எங்களுக்கு பெரிய அளவில் உதவுவதற்கு யாரும் இல்லை.
நேத்ரனுடைய குடும்பத்தினர் ஆரம்பத்திலிருந்து ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். நேத்ரனுடைய அப்பா எம்ஜிஆர், விகே ராமசாமி போன்றவருக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்திருக்கிறார். அது மூலமாகத்தான் நேத்ரனுக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. நேத்ரன் குழந்தை நட்சத்திரமாக ரஜினி நடித்த ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் தான் அறிமுகமானார்.

அதற்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு சீரியல்களிலும் நடித்திருந்தார். அதுபோல நேத்ரன் இறந்த அன்று திடீரென்று வயிறு வலி வந்ததும் நாங்கள் அவசரமாக ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனோம். அப்போது டாக்டர்கள் மனசை தைரியமா வச்சுக்கோங்க, என்ன வேணாலும் நடக்கும் என்று சொன்னாங்க.
எங்களுக்கு அதிர்ச்சியா இருந்தது ஏற்கனவே நாம ட்ரீட்மென்ட் எடுத்து இருக்கோமே அப்புறம் ஏன் இப்போ இப்படி சொல்றீங்க என்று கேட்டால் அதற்கு அவர்கள் நோயின் தாக்கம் உடம்பு ஃபுல்லா பரவிருச்சு. அது போல இப்போ பல்ஸ் கம்மியா இருக்கு என்று சொன்னாங்க. பிறகு அவருக்கு ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருந்தது.

மதியத்துக்கு மேலே அவருடைய ஒரு கண் முழுக்க கருப்பு மட்டும் தான் தெரிந்தது. பிறகு அவருக்கு மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கு என்று வென்டிலேட்டர் வைத்தார்கள். நாங்க எல்லாரும் வெளியில் தான் நின்னுட்டு இருந்தோம். பிறகு என்னுடைய மகள்கள் தான் என்னை கட்டாயப்படுத்தி சாப்பிட கூட்டிட்டு போனாங்க. நான் சாப்பாட்டில் கை வைத்திருந்த நேரத்தில் நேத்ரன் இந்த உலகத்தை விட்டு போயிட்டாருன்னு சொன்னாங்க.

அப்படியே தூக்கி போட்டுட்டு ஓடி வந்தேன். அவருக்கு வயிறு வலி இருந்தபோதே நாங்கள் சொன்னதும் அவர் ஸ்கேன் பண்ணி பார்த்து இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது என்று தோணுது. அவருக்கு ஆரம்பத்தில் இதயத்தில் சின்ன பிரச்சனை இருந்தது அப்போது ஹோமியோபதி மூலமாக சரி பண்ணியதால் வயிறு வலி பிரச்சனையும் ஹோமியோபதியில் சரி பண்ணிடலாம் என்று நம்புனாரு என்று கண்கலங்க அந்த பேட்டியில் தீபா பேசியிருக்கிறார்.













Click it and Unblock the Notifications