நாதஸ்வரம் சீரியல் “பாண்டி” ஞாபகம் இருக்கா? அவருடைய மனைவிக்கு திடீர் ஆபரேஷன்.. அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: சன் டிவில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் பாண்டி கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் பாண்டி கமல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய மனைவி குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார். தன்னுடைய மனைவிக்கு சமீபத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது குறித்து அதில் அவர் பேசியிருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சன் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்த நடிகர்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் பிரபலம் ஆக இருக்கின்றனர். அந்த வகையில் தான் யாராலும் மறக்க முடியாத நாதஸ்வரம் சீரியலில் நடித்த பல நடிகர்கள் இருக்கின்றனர். அதிலும் பாண்டி கேரக்டரில் பலருடைய திட்டல்களை வாங்கிக் கொண்டிருந்த நடிகர் பாண்டி கமல் நாதஸ்வரம் சீரியலுக்குப் பிறகு எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரம் புகழும் அவருக்கு நாதஸ்வரம் சீரியலில் தான் அதிகமாக கிடைத்தது.

சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா என்ற சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல நடிகராக மட்டுமல்லாமல் ஆர்ஜேவாகவும், விஜேவாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் பாண்டி கமல் தன்னுடைய மனைவி மருத்துவமனையில் இருப்பது போன்ற ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்த நிலையில் எல்லோரும் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து பாண்டி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய மனைவிக்கு வேறு எதுவும் பெரிய பிரச்சனை இல்லை. ஒரு கட்டி இருந்தது அதற்காக சர்ஜரி செய்தோம். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. அந்த கட்டியை டெஸ்ட்க்கு அனுப்பி இருந்தோம். அங்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ரிசல்ட் வந்திருக்கிறது என்று பாண்டி கமல் கூறியிருக்கிறார்.
அதோடு மனைவிக்கு செய்யப்பட்ட ஆபரேஷன் தையல் இன்னும் பிரிக்கப்படவில்லை என்றும் தன்னுடைய மனைவியின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். அதோடு அவர் மேலும் பேசுகையில் 15 வருடங்கள் கழித்தாலும் கூட நாதஸ்வரம் சீரியலில் பாண்டி என்ற கேரக்டர் இன்னும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுள்ளது. தனக்கு கடவுள் நேரடியாக வந்து உதவி செய்யாமல் திருக்குமரன் சார் மூலமாக வந்து உதவி செய்தார் என்றும் கூறியிருக்கிறார்.
நாதஸ்வரம் சீரியல் மூலமாகத்தான் நான் பிரபலமாகி தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்று சந்தோஷமாக பேசி இருக்கும் பாண்டி கமல் தன்னுடைய மகள் பிறந்த நாளுக்காக இயக்குனர் திருமுருகனை கூப்பிட போயிருந்தார்களாம். அப்போது அவர் அடுத்த சீரியலுக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இருக்கிறார் என்றதும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நாங்கள் மேனேஜரிடம் சொல்லிவிட்டு திரும்பி வந்து விட்டோம். ஆனால் அவர் நேரில் அழைப்பு கொடுக்கவில்லை என்றாலும் முதல் நாளாக வந்து என்னுடைய மகளுக்கு தங்க கம்மல் பரிசு கொடுத்தார் என்று திருமுருகன் குறித்து நடிகர் பாண்டி கமல் பெருமையுடன் பேசி இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications