Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவயானிக்கு காசு கொடுத்தது வேஸ்ட்.. அவங்க நடிக்க மாட்டாங்க! பார்த்திபன் சொன்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பார்த்திபன் பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது தேவயானிக்கு படத்தில் நடிப்பதற்கு காசு கொடுப்பது வேஸ்ட் அவங்க நடிக்கவே மாட்டாங்க என்று தேவயானியின் முன்பே பேசி இருக்கும் நிலையில் இதை கேட்டு தேவயானி அதிர்ச்சி ஆகியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

90ஸ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் முக்கியமானவர்தான் தேவயானி. ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் காதல் கோட்டை திரைப்படத்திற்கு பிறகு புகழின் உச்சத்திற்கே தேவயானி போயிருந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்து. அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருந்தது. அதிலும் சூரியவம்சம், நினைத்தேன் வந்தாய், நீ வருவாய் என, பாரதி போன்ற திரைப்படங்கள் எல்லாம் இவருடைய நடிப்பில் இப்ப வரைக்கும் பேசப்படும் திரைப்படங்கள்.

devayani parthiban

இந்த திரைப்படங்களுக்காக இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி என பல மொழிகளிலும் தேவயானி நடித்திருக்கிறார். அதேபோல சினிமாவில் புகழில் உச்சத்தில் இருக்கும்போது தேவயானி நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தின் இயக்குனரான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த தேவயானி மீண்டும் நடிக்க தொடங்கி இருந்தார். அதிலும் சின்னத்திரையில் அவர் நடித்த கோலங்கள் சீரியல் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்திருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தேவயானி நடித்து அவருடைய கணவர் இயக்கிய நீ வருவாய் என திரைப்படத்தின் 25 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது அந்த திரைப்படத்தில் நடித்த பல நடிகர்கள் அதில் கலந்து கொண்டனர். நீ வருவாய் என திரைப்படம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. அந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் கோமியோ ரோலில் நடித்து இருப்பார். பிறகு தேவயானியை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் பார்த்திபன் நடித்திருப்பார்.

பார்த்திபன் நடிப்பதற்கு முன்பு இதே கேரக்டரில் நடிகர் விஜய் நடிக்க இருந்ததாகவும் ஆனால் கதையை கேட்ட பிறகு தனக்கு அஜித் நடிக்க இருக்கும் கேரக்டர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று விஜய் சொன்னதாகவும் ஆனால் அஜித் ஏற்கனவே அந்த கேரக்டரில் கமிட் ஆகிவிட்டார் என்பதால் விஜய் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் ராஜகுமாரன் இதற்கு முந்தைய பேட்டியின் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது நீ வருவாய் என திரைப்படத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்ட போது நடிகர் பார்த்திபன் தேவயானி குறித்து பேசியது தான் இணையத்தில் பல கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் அவர் பேசுகையில், தேவயானி நடிக்கவே மாட்டாங்க. அவங்களுக்கு பணம் கொடுக்கிறது வேஸ்ட். பணத்தை வாங்கிட்டு அவங்க நடிக்காமல் அந்த கேரக்டரா வாழ்ந்துருவாங்க.

நீ வருவாய் என திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறுவதற்கு காரணம் அந்த திரைப்படத்தின் கதையாக இருந்தாலும் கூட, அதில் தேவயானியின் நடிப்பும் முக்கிய பலமாக இருந்தது. அந்த திரைப்படம் ரொம்பவும் கிரிட்டிக்கலான ஒரு திரைப்படம். அதில் கொஞ்சம் பிசிரு தட்டினால் கூட கதை மொத்தமாக மாறிவிடும். அந்த திரைப்படத்தில் அழகான தன்னுடைய இயல்பான நடிப்பை தேவையானி கொடுத்ததால் தான் திரைப்படம் இன்று வரைக்கும் பேசப்படுகிறது.

அதில் என்னுடைய கேரக்டர் தேவயானியை காதலித்துக் கொண்டிருக்கும். ஆனால் தேவயானி கோடி கொடுத்தாலும் என்னுடைய மனம் மாறாது என்று சொல்லிவிடுவார். ஆனால் நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் நான் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன். ஒரு சூரியன் எப்படி சூரியகாந்தியை காதலிக்கிறதோ அதுபோல நானும் உன்னை பார்த்துக்கொண்டே இருப்பேன் என்று இறுதியில் வசனங்கள் வரும். அதில் எல்லாம் தேவயானி அவ்வளவு இயல்பாக நடித்து இருப்பார். அதனால் தான் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய பாராட்டு பெற்றது என்று அந்த பேட்டியில் பார்த்திபன் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+