பிரபுவை இந்த நடிகையும் காதலித்தாரா? ஒரே ரகளையாமே! அதவிடுங்க, அறிவாலய வாசலில் யாரந்த 2 பேர்: பிரபலம்
சென்னை: கமல் கட்சியில் உள்ளவர்கள் எல்லாரும் இப்போது போய்விட்ட நிலையில், இன்றுவரை கமலுக்கு உறுதுணையாக இருந்து வருபவர் ஸ்ரீபிரியா மட்டுமே.. இப்போது 2 பேரும் அறிவாலய வாசலில் நிற்கிறார்கள்.. கமல் எம்பியாகிறாரா? ஸ்ரீபிரியா எம்பியாகிறாரா? தெரியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.
Behind Cinema என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "எல்லா உச்சக்கட்ட நடிகர்களும் நடித்த ஸ்ரீபிரியா, ஒரு சீரியஸான நடிகையாக பார்க்கப்பட்டவர்.

நடிகர் கார்த்திக்குடன் "நினைவுகள்" படத்தில் நடித்தபோது, இருவரும் காதலித்துள்ளனர். திருமண ஏற்பாடு விஷயம் சென்றுள்ளது. இத்தனைக்கும் கார்த்திக்கை விட 4 வயது மூத்தவர் ஸ்ரீபிரியா. ஆனால், கார்க்திக் ராகினியை திடீரென திருமணம் செய்துகொண்டார். ராகினியின் சகோதரர்கள், கார்த்திக்கை அழைத்து சென்று, இந்த திருமணத்தை செய்ய வைத்தனர்.
தற்கொலை முயற்சி: ஒருநாள் ஏவிஎம் ஸ்டுடியோவில் கார்த்திக், ராகினி ஷூட்டிங் நடந்தபோது, அங்கு வந்த ஸ்ரீபிரியா, இருவரையும் அடித்து உதைத்து, செட்டையே நொறுக்கிவிட்டார். கார்த்திக் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றார். கடைசியில் திரைப்பட உலகத்தினர் அத்தனை பேரும் தலையிட்டு, ஸ்ரீபிரியாவின் உயிரை காப்பாற்றினார்கள்.. அப்போது திரைப்பட உலகினர் கார்த்திக்கிற்கு விட்ட சாபம் சொல்லி மாளாது.
1982-ல் சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபருடன் ஸ்ரீபிரியாவுக்கு திருமணம் நடந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று உள்ளது. அதேபோல, பிரபுவை ஸ்ரீபிரியா காதலித்ததாகவும், ஆனால், அதை சிவாஜி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும்கூட சில அரசல்புரசல் செய்திகள் உண்டு.. இறுதியில், நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாருடன் 1988-ல் ஸ்ரீபிரியாவுக்கு திருமணம் நடந்தது.
சின்னத்திரை: குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, சின்னத்திரை என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர் ஸ்ரீபிரியா. ஆனால், மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி நடித்த கேரக்டரை தவறவிட்டதற்காக நிறைய வருத்தப்பட்டுள்ளார்..
எனினும், ருத்ரையாவின் "அவள் அப்படித்தான்" படத்தில் ஸ்ரீபிரியாவின் நடிப்பு முத்திரை பதித்தது. இன்றுவரை அவரது நடிப்பு அதில் பேசப்பட்டு வருகிறது. ஸ்ரீபிரியா நடித்த படங்களிலேயே, வைர கிரீடம் வைத்தது போன்ற படம் என்றால் அது "அவள் அப்படித்தான்" படம்தான். இன்றுவரை ஸ்ரீபிரியாவின் புகழை தக்கவைக்கிறது அந்த படம்.
சாந்தி முகூர்த்தம்: சினிமா வாய்ப்பு குறைந்ததுமே சினிமாவில், டைரக்ஷன் செய்ய போனார் ஸ்ரீபிரியா. சாந்தி முகூர்த்தம் என்ற பெண்கள் விழிப்புணர்வை படத்தை எடுத்தார். நன்றாக ஓடாவிட்டாலும், நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதற்கு பிறகு அடுத்தடுத்த படங்களை இயக்கி, தன்னால் டைரக்ஷனும் செய்ய முடியும் என்று நிரூபித்தவர்.
இதற்கு பிறகு, கமல் கட்சியில் வந்து சேர்ந்தார்.. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளராக இருந்த ஸ்ரீபிரியா, பலவேறு பதிலடிகளை தந்து வந்தார். "அடுத்த 3 அமாவாசையில நானே உங்கள் கட்சிக்கு பால் ஊத்த போறேன்" என்று முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு துணிச்சலுடன் பதிலளித்திருந்தார் ஸ்ரீபிரியா.
மக்கள் நீதி மய்யம்: இப்ப கமல் கட்சியில் எல்லாரும் போயிட்டாங்க.. ஆனால் மயிலாப்பூர் தொகுதியில் தான் போட்டியிட்டு தோல்வி அடைந்தபிறகும்கூட, இன்றுவரை கமலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இப்போது 2 பேரும் அறிவாலய வாசலில் நிற்கிறார்கள்.. கமல் எம்பியாகிறாரா? கமல் எம்பியாகிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications