நடிகர் கவின் வாழ்க்கையில் நடந்த சோகம்.. 14 பேர் பலியான சம்பவம்.. உயிர் நண்பன் பிரதீப் செய்ததை பாருங்க
சென்னை: நடிகர் கவின் நடித்த "ஸ்டார்" திரைப்படம் வெளியாகி திரையரங்கில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. கவின் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து பேசியது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. அப்படி கவின் வாழ்க்கையில் என்னதான் நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் நடிகர் கவினை திரையில் பார்த்த ரசிகர்கள் பலருக்கும் அதிகமாக பிடித்து இருக்கும். அவருடைய துறுதுறுப்பு மற்றும் காமெடி கலந்த பேச்சு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பலருக்கும் தெரிந்திருக்கும். வேட்டையன் கேரக்டரில் இவர் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார்.

அதற்கு பிறகு பீசா, இன்று நேற்று நாளை, சத்ரியன், நட்புனா என்னனு தெரியுமா? போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த கவினுக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்தது "டாடா" திரைப்படம் தான். அந்த திரைப்படத்திற்கு பிறகு இப்போது அவர் நடித்து வெளியான "ஸ்டார்" திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கவினுக்கு யாருக்கும் தெரியாத மறுபக்கம் சோகங்கள் நிறைந்ததாக தான் இருந்திருக்கிறது.
கவின் ஆரம்பத்தில் படிப்பதில் சுமாரான சுட்டிக் குழந்தையாக இருந்தாலும் அவருடைய தந்தை வெளிநாட்டில் வேலை செய்திருக்கிறார். அதுவும் அங்கு ஏசி அறையில் இருந்த படி ஹாயாக பார்க்கும் வேலை இல்லை. எலக்ட்ரீசியன் போன்ற ஒரு வேலையில் தான் வெளிநாட்டில் சேர்ந்திருக்கிறார். தான் பார்த்த வேலையால் அவருடைய கண் பார்வையே பறிபோகிற அளவிற்கு கண்கள் பாதிக்கப்பட்டு இருந்ததாம்.
அங்கு அவர் கஷ்டப்பட்டு வெயிலில் வேலை செய்த நிலையில் தன்னுடைய மகன் சரியாக படிக்கவில்லை என்று ஒருமுறை ஊருக்கு வந்திருந்த போது கவினை போட்டு அடித்து வெளுத்து விட்டாராம். அது குறித்து ஒரு பேட்டியில் கண்கலங்க கவின் கூறி இருந்தார். நான் என்னுடைய அப்பாவோடு இரண்டே இரண்டு தீபாவளி தான் கொண்டாடியிருந்தேன். அதிலும் ஒரு தீபாவளிக்கு தான் என்னுடைய அப்பா என்னை அடித்து துவைத்தார்.
அதை என்னால் மறக்க முடியாது. நான் நடித்த டாடா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனாலும் அந்த வெற்றியை என்னால் சந்தோஷமாக கொண்டாட முடியவில்லை. அதற்கு காரணம் எங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரி நான் படிச்சு பெரிய ஆளாக முடியவில்லை என்ற ஒரு ஏக்கம் இருக்கிறது என்று கூறியிருந்தார். அதுபோல கவின் நடிப்புக்காக முயற்சி செய்து கொண்டு இருந்த போது தான் அவருக்கு பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
அவருடைய பாட்டி இறந்து போய்விட்டார் என்பதற்காக கவின் குடும்பத்தோடு அவருடைய சொந்த ஊருக்கு வேனில் போய் இருக்கிறார். அப்போது கவின் உடைய அக்காவுக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த சம்பவம் நடக்க வேறு வழியில்லாமல் தான் எல்லோரும் குடும்பமாக போயிருக்கிறார்கள். அப்போது இடம் இல்லாததால் வேனின் முன் பகுதியில் அவருடைய அக்கா உட்காருதேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு கவின் வேண்டாம் நான் உட்காருதேன் என்று சொல்லி மாறி இருந்திருக்கிறார். ஆனால் வேன் வந்து கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் திடீரென்று விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதில் கவினுக்கு அதிகப்படியான அடி ஏற்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாம். ஏற்கனவே கவின் வந்த வேன் விபத்து ஏற்பட்ட இடத்தில் நடந்த விபத்தில் 14 பேர் விபத்தில் இறந்து போயிருந்தார்களாம்.
கெட்டதிலும் நல்லது என்ற மாதிரி கல்யாணத்துக்கு முந்தய வாரம் நடந்த விபத்தில் நல்லவேளையாக அவருடைய அக்காவுக்கு எந்த அடியும் படவில்லை. ஆனாலும் கவினுக்கு இந்த விபத்தால் ஆறு மாதத்திற்கு மேலே நடக்க முடியாமல் ஹாஸ்பிடலில் தான் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டிலும் கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் கவினை உடனிருந்து பார்த்துக்கொண்டது பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த பிரதீப் தான்.
கவினும் பிரதீப்பும் நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அந்த நேரத்தில் பிரதீப் தான் முழுக்க முழுக்க கவினோடு இருந்திருக்கிறார். ஹாஸ்பிடலில்இருக்கும்போது கவினுக்கு பாத்ரூம் போவதற்கு உதவுவதில் இருந்து அவரை துடைத்து எடுப்பதற்கு வரை எல்லா வேலைகளையும் பிரதீப் தான் பார்த்துக் கொண்டாராம். ஆனால் பிரதீப் செய்த சின்ன சின்ன செயல்கள் என்னால் மறக்க முடியாது என்று கவின் கூறி இருக்கிறார்.
அப்படி அவர் சொல்வதற்கு என்ன காரணம்னா கவின் பக்கத்திலேயே இருந்து கொண்டு பிரதீப் திடீரென்று காணாமல் போய்விடுவார். எங்கே என்று கேட்டால் அம்மா உணவகத்துக்கு போய் மட்டன் சுக்கா சாப்பிட்டேன், இறால் தொக்கு சாப்பிட்டேன் என்று வந்து கவினை வெறுப்பேத்துவாராம். சாப்பிட்டதும் போதாது என்று என்ன பண்ண நீ சாப்பிட முடியாது அதுக்காக நான் சாப்பிடாமல் இருக்க முடியாதுல அதனால நான் போய் சாப்பிட்டு வந்தேன் என்று சொல்லுவாராம்
அதுபோல அங்கு இருந்தா நர்சை சைட் அடிச்சு கவினை வெறுப்பேத்துவாராம். அதுபோல குத்து பாட்டை போட்டு இதுக்கு வைப் பண்ணுனா நல்லா இருக்கும்ல்ல என்று கவின் சோகத்தை மறக்கும் நண்பராக பிரதீப் அந்த நேரத்தில் இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு வாடகை கொடுக்க கூட கவினுக்கு முடியாத நிலையில் இயக்குனர் நெல்சன் சில மாதங்கள் கொடுத்திருக்கிறார்.
அதுபோல கவினின் இன்னொரு நண்பர் வாடகை மற்றும் செலவுக்கு பணத்தையும் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனாலும் அந்த நேரத்தில் கவினுக்கு சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது மீண்டும் சீரியலுக்கு போய்விடலாமா என்று யோசித்து கொண்டு இருந்த நேரத்தில் தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஒரு பக்கம் பாசிட்டிவ் ஆகவும் ஒரு பக்கம் நெகட்டிவ்வாக வந்தாலும் அதற்கு பிறகு கவினுக்கு திரைப்படங்கள் வெற்றி அடைந்து இன்று ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இதன் மூலம் எல்லோருக்கும் சொல்வது ஒன்றுதான் இன்னைக்கு நிலைமை கஷ்டமாக இருக்கலாம். நடிகராக வேண்டும் என்று கனவோடு இருந்த கவினுக்கு கால் உடைந்து இன்று வரைக்கும் அவரால் டான்ஸ் ஆடுவதற்கு கஷ்டப்பட்டு கொண்டிருந்தாலும் உழைப்பு மற்றும் விடாமுயற்சி காரணமாக இன்று அவருடைய திரைப்படங்கள் வெற்றி அடைந்திருக்கிறது. அதுபோல எல்லா துறையில் இருக்கும் நபர்களுக்கும் சில கஷ்டங்கள், நஷ்டங்கள் வரத்தான் செய்யும். அதற்காக சோர்வடைந்து துவண்டு போய் இருக்காமல் அதிலிருந்து எப்படி மீண்டு வர என்பதை மட்டும் யோசித்தால் இன்று இல்லை என்றாலும் ஒருநாள் நாம நினைச்சதை கண்டிப்பா நாம் அடைந்தே தீருவோம்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications