விஜய் சேதுபதி எனக்கு மச்சான் தான்..அந்த வார்த்தையை நேரடியாக சொன்னாரு.. அது ஒரு காலம்.. பிரஜின் ஓபன்
சென்னை: சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி கதாநாயகனாக நடித்த நடிகர் பிரஜின் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது விஜய் சேதுபதியோடு தனக்கு இருக்கும் பந்தம் மற்றும் விஜய் சேதுபதி பேசிய சில தகவல்களையும் பேசியிருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் பல நடிகர்கள் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் நடிகர் பிரஜின். இவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். ஆரம்பத்தில் சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிறகு சின்ன தம்பி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, அன்புடன் குஷி போன்ற பல சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

காதல் திருமணம்
அதுபோல சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகை சான்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருக்கிறது. இப்போது சான்ரா குழந்தைகளை கவனித்து வருவதால் சீரியலில் அதிகமாக நடிக்கவில்லை. ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்திருந்தார். அவரும் தொகுப்பாளராக இருந்து தான் சீரியலில் நடிக்க தொடங்கி இருந்தார். தலையணை பூக்கள் சீரியல் சான்ராவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
நடிகை சான்ரா இன்டர்வியூ
சில மாதங்களுக்கு முன்பு சான்ரா தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் கடந்த கால வாழ்க்கை குறித்து கண்கலங்க பேசிய வீடியோ இணையத்தில் பயங்கர வைரல் ஆனது. இரண்டு வீட்டின் சப்போர்ட் இல்லாமல் தாங்கள் திருமணம் செய்து கொண்டு ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்கள் பிறகு குழந்தை பிறந்த புதியதில் பட்ட கஷ்டங்கள் குறித்து எமோஷனலாக பேசியதை கேட்டு பலரும் பீல் பண்ணி இருந்தனர்.
விஜய் சேதுபதியின் பாசம் குறையல
இந்த நிலையில் விஜய் சேதுபதி குறித்து பேட்டி ஒன்றில் பிரஜின் பேசியிருக்கிறார். அதில் விஜய் சேதுபதியை நான் மச்சான் என்று தான் கூப்பிடுவேன். இருவரும் ஆரம்பத்தில் சீரியலில் நடித்து இருக்கிறோம். பிறகு விஜய் சேதுபதி படங்களுக்கு நடிக்க போய்விட்டாலும் எங்களுடைய நட்பு அதே போல தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எந்த ஒரு விஷயம் என்றாலும் நான் விஜய் சேதுபதிக்கு போன் செய்து பேசுவேன்.
விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை
சேதுபதியும் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியேதான் பேசிக் கொண்டிருக்கிறார். லாக் டவுன் நேரத்தில் நான் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன் அப்போது எங்களுக்கெல்லாம் பெரிய அளவில் பிரச்சனை வரவில்லை. எங்களுக்கு சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதனால் எங்களுக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால் விஜய் சேதுபதி படத்தில் நடித்த கொண்டிருந்ததால் அவருக்கு அந்த நேரத்தில் வருமானங்கள் பெரிதாக இல்லை அது குறித்து என்னிடம் கூட கிண்டல் செய்து இருந்தார்.
மாறாத யோகி பாபு
மச்சான் நீங்க எல்லாம் லாக் டவுன்ல கூட நல்லா வாழுறீங்க என்று சொன்னாரு. ஏன்னா அந்த நேரத்தில் எங்களுக்கு 30 நாளும் ஷூட்டிங் இருந்தது. அதுபோல ஒரு சிலர் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் பழசை மறக்காம அப்படியே தான் இருக்குறாங்க. யோகி பாபுவையும் எனக்கு நல்லா தெரியும். ஒரு படத்தில் கதாநாயகனாக நான் நடிக்கும்போது அவரும் அந்தப் படத்தில் நடித்திருந்தார்.
ரசிகர்களின் வேண்டுகோள்
அப்போது இருந்து இருவரும் பேசிக் கொள்வோம். அவரும் எந்த இடத்திலும் மாறவில்லை அப்படியே தான் இருக்கிறார் என்று அந்த பேட்டியில் பிரஜின் கூறி இருக்கிறார். அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் சீரியலில் பிரஜின் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அவருடைய கேரக்டர் ஆரம்பத்திலேயே இறந்து போய் விடுவது போன்று காட்டப்பட்டிருக்கிறது. இதனால் இவர் தொடர்ந்து சீரியலில் வருவது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications