பிரசாந்த் கையில் ஒரு பைசா கூட இருக்காது.. வித்தியாசமான காரணம்! இப்படி நம்புறாங்க! நடிகர் புஜ்ஜி பாபு விளக்கம்
சென்னை: நடிகர், மேக்கப் ஆர்டிஸ்ட்டான புஜ்ஜி பாபு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பிரசாந்துக்கு பல வருடங்களாக தான் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருந்தது குறித்து பேசி இருந்தார். அதோடு பிரசாந்திடம் கையில் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டார்கள் அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது என்று சில விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.
திரையில் பல பிரபலங்கள் அழகாகவும், தனித்துவமாகவும் தெரிவதற்கு அவர்களுக்கு பின்னால் பலர் உழைக்கிறார்கள். அதுபோல ஒருவர்தான் மேக்கப் ஆர்டிஸ்ட் புஜ்ஜி பாபு. இவரை மேக்கப் ஆர்டிஸ்ட் என்று பலருக்கும் தெரியவில்லை என்றாலும் நடிகராக தெரிந்திருக்கும். நடிகர் சந்தானம் உடன் பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

காமெடி நடிகர்
அதுபோல விஜய் மற்றும் அமலாபால் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் அமலாபால் அப்பாவின் ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் செஃப்பாக நடித்திருப்பார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் புஜ்ஜி பாபு கலந்து கொண்ட போது நடிகர் பிரசாந்த் பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, நான் பிரசாந்துக்கு பல வருடங்களாக மேக்கப் செய்திருக்கிறேன்.
ஜீன்ஸ் திரைப்பட அனுபவம்
அவர் சினிமாவில் அறிமுகமான காலத்தில் இருந்து வின்னர் திரைப்படம் வரைக்கும் நான் தான் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். பிறகு எனக்கும் தியாகராஜன் சாருக்கு சின்ன கருத்து வேறுபாடு வந்துவிட்டது அதனால் நான் பிரசாந்தை விட்டு வந்து விட்டேன். அதுபோல ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்துக்கு நான் மேக்கப் போடும்போது அந்த மேக்கப் பிரசாந்துக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
பிரசாந்த் பிடிவாதம்
இன்னும் கோட்டிங் அதிகமாக வைக்க வேண்டும் லிப்ஸ்டிக் போட வேண்டும் என்று அவர் கேட்டார் ஆனால் நான் அப்படியெல்லாம் முடியாது அது செட்டாகாது என்று சொன்னேன். பிறகு பிரசாந்த் இது பற்றி அவருடைய வீட்டில் பேசிவிட்டார். அதனால் அவருடைய அப்பா பிரசாந்த் ஆசைப்பட்டது போல போட்டு விடுங்க என்று சொன்னார். நானும் சரி என்று போட்டேன் ஆனால் இயக்குனர் அதை பார்த்துவிட்டு செட் ஆகல என்று சொல்லிவிட்டார்.
உதவி
பிறகு நான் எப்போதும் மேக்கப் போடுவது போல போட்டு விட்டேன். அதுபோல பிரசாந்த் கையில் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டாங்க. காரணம் பிரசாந்த் கையால் யாருக்காவது பணம் கொடுத்தால் லட்சுமிதேவி பிரசாந்த் குடும்பத்தை விட்டு போய்விடும் என்று அவங்க குடும்பத்தினர் நம்புறாங்க. ஒருமுறை சூட்டிங் ஸ்பாட்க்கு ஒரு அசிஸ்டன்ட் லேடி வந்து இருந்தாங்க. அவங்க பொண்ணுக்கு பீஸ் கட்ட பணம் இல்லன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க
பிரசாந்த் பற்றிய ரகசியம்
அந்த நேரத்தில் பிரசாந்த் சார் கையில் பணம் எதுவும் கிடையாது ஆனால் அவரும் அதற்காக வருத்தப்பட்டார். அப்போ என் கையில் ஐயாயிரம் ரூபாய் இருந்தது அதனால் அதை பிரசாந்த் சார் கையில் கொடுத்து அந்த பொண்ணுக்கு கொடுக்க சொன்னேன். அவரும் கொடுத்துவிட்டார். ஆனால் இது பற்றி வீட்டில் சொல்லி இருக்கிறார். உடனே அவங்க வீட்டில் இருந்து இனி இதுபோல பிரசாந்த் கையால் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அதற்கு பிறகு நான் அதுபோல யாருக்கும் கொடுத்தது கிடையாது. சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது சாதாரணமாக சுண்டல் வாங்க வேண்டும் என்றால் கூட நான் தான் பணத்தை கொடுப்பேன். பிறகு எனக்கு பணத்தை கொடுப்பார்கள் என்று புஜ்ஜி பாபு பேசி இருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications