அன்னதானத்தை 10 நாள்தான் போட்டுட்டு நிறுத்திடுவான்னு சொன்னாங்க! இன்று 500வது நாள்! புகழ் பெருமிதம்
சென்னை: வள்ளல் விஜயகாந்த் நினைவு அன்னதான அறக்கட்டளை என்ற பெயரில் நடிகர் புகழ் தனது அலுவலகத்தில் அன்னதானம் அளித்து வரும் நிலையில் இன்று 500-ஆவது நாளாக அன்னதானத்தை வழங்கியுள்ளார்.

சென்னை கலைஞர் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் தினமும் மதிய வேளையில் சாப்பாடும் தண்ணீர் பாட்டிலும் புகழ் கொடுத்து வருகிறார்கள். வாரத்தில் இரு நாட்களாவது அந்த சாப்பாடு எப்படி இருக்கிறது என்பதை சாப்பிடும் ஏழை எளிய மக்களிடமே கருத்து கேட்டும் வருகிறார்.
விஜயகாந்த் என்றாலே எல்லாரும் சொல்வது அவருடைய ஆபிஸுக்கு போனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவும், மற்ற நாட்களில் சைவ உணவும் வழங்கப்பட்டு வந்தது. அது போல் விஜயகாந்த் தனது வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை சாப்பிட வைக்காமல் அனுப்பவே மாட்டார் என நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கிறோம்.
விஜயகாந்த்
இது போன்ற தகவல்கள் விஜயகாந்த் இறந்த பிறகு நிறைய வெளியே வந்தது. இந்த நிலையில் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த புகழ், அவரை போல தன்னால் முடிந்த வரை மக்களுக்கு உணவு அளிப்பேன் என தெரிவித்திருந்தார்.
500ஆவது நாள்
அதன்படி கலைஞர் நகரில் உள்ள புகழின் அலுவலகத்தில் தினமும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 500 ஆவது நாள் உணவு அளிக்கும் நிகழ்வு நடந்தது. அதற்கு முன்னதாக விஜயகாந்தின் கோயிலுக்கு சென்ற புகழ் அங்கு அவரிடம் ஆசி பெற்றார்.
விஜயகாந்திடம் ஆசி
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் வந்து நான் உங்களை போல் உணவளிக்கும் திட்டத்தை ஆரம்பிக்க போகிறேன் என சொல்லி ஆரம்பித்தேன். இன்று 500ஆவது நாள். கேப்டனின் அருளால் எல்லாம் நடந்து வருகிறது. 500 ஆவது நாள் என்பதால் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு நான் சாப்பாடு போட போகிறேன். நிறைய பேர் சொன்னாங்க, "இவன் அன்னதான திட்டத்தை ஆரம்பித்து ஒரு 10 நாள், 20 நாள் போடுவான், அதன் பிறகு நிறுத்திவிடுவான் என நிறைய பேர் சொன்னார்கள்.
என் குழந்தைகளும்
அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 500 ஆவது நாளில்லை. என் காலத்திற்கு பிறகு என் குழந்தைகளும் இதை தொடருவார்கள். இதே சாலிகிராமத்தில் உள்ள காவேரி தெருவில் வாட்டர் வாஷில் வேலை செய்தேன். அப்போதெல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டிருக்கிறேன். அந்த வலிதான் இன்று உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
மக்களுக்கு உதவி
விஜயகாந்த் அய்யா இறந்த பிறகு நிறைய பேர் அவரது அன்னதானத்தை பாராட்டினார்கள். அதனால் மக்களால் சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கும் நான் அந்த மக்களுக்காக உதவி செய்யலாம் என நினைத்துதான் இதை செய்து வருகிறேன். தற்போதைக்கு 50 பேருக்கு மதியம் ஒரு வேளை உணவு அளித்து வருகிறேன். எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்து அதில் சம்பாதித்தால் நிறைய உதவிகளை செய்வேன் என புகழ் தெரிவித்தார்.
யார் இந்த புகழ்
கலக்க போவது யாரு எனும் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் புகழ். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மேலும் புகழடைந்தார். இவர் மிஸ்டர் ஜூகீப்பர், துடிக்கிறது மீசை, கைதி, வலிமை, எதற்கும் துணிந்தவன், ஆகஸ்ட் 16 1947 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜூன் மாதம் இவர் பெண் வேடத்தில் நடித்த படம் ஒன்று வெளியாகிறது. இவருக்கும் பென்ஸி என்பவருக்கும் திருமணம் நடந்து தற்போது ரித்தன்யா என்ற மகள் உள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications