நடிகர் ஆர். சுந்தர்ராஜனுக்கு இரண்டு மனைவியா? அதுவும் முதல் மனைவி யார் தெரியுமா? வெளிவந்த ரகசியங்கள்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில்கதாநாயகனின் அப்பாவாக அண்ணாமலை கேரக்டரில் நடித்துவரும் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் பற்றிய செய்திதான் இப்போது இணையத்தில் அதிகமாக இருந்து வருகிறது. சுந்தர்ராஜன் நடிகராகவும் இயக்குனராகவும் பலருக்கும் பரிட்சயமாகி இருந்தாலும் அவருடைய குடும்ப வாழ்க்கை குறித்த தகவல்கள் இப்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது நடிகர் சுந்தர்ராஜனுக்கு இரண்டு மனைவிகள் என்பது தான் இப்போது ரசிகர்களுக்கு தெரிய வந்த ரகசியமாக இருக்கிறது. அதுவும் சுந்தர்ராஜனின் மனைவியான துர்கா சுந்தர்ராஜன் டப்பிங் கலைஞராக இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய கணவர் சுந்தர்ராஜன் குறித்து பெருமையாக பேசி இருந்தார். இந்த நிலையில் சுந்தர்ராஜன் குறித்து ரசிகர்கள் இணையத்தில் தேடி பார்த்த போது அவருடைய மனைவியின் பெயர் சரஸ்வதி என்று இருந்த நிலையில் அதிர்ச்சியான ரசிகர்கள் சுந்தர்ராஜன் பயோகிராபியை தேடிக் கொண்டிருக்கின்றனர். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் சுந்தர்ராஜன் அன்று சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கி, பயணங்கள் முடிவதில்லை, அந்த ராத்திரிக்கு சாட்சிகள் இல்லை, வைதேகி காத்திருந்தாள், குங்குமச்சிமிழ்,
ராஜாதி ராஜா, எங்கிட்ட மோதாதே, என் ஆசை மச்சான் என்று பல திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். அதோடு பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
அதுவும் இவருடைய நடிப்பில் சூரியவம்சம், ஜானகிராமன், நட்புக்காக பெரியண்ணா போன்ற திரைப்படங்களில் இவருடைய கேரக்டர் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும். அதுவும் கடைசியாக சித்திரையில் நிலா சோறு என்ற திரைப்படத்தை இயக்கி அதில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்த ஆர் சுந்தர்ராஜன் அதற்குப் பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் பல வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை கேரக்டரில் கதாநாயகனின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் டப்பிங் கலைஞரான துர்கா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய கணவர் சுந்தர்ராஜன் குறித்து பல விஷயங்களையும் தாங்கள் திருமணமான புதியதில் பட்ட கஷ்டங்கள் குறித்தும் அதில் பேசியிருந்தார் .

இந்த நிலையில் ரசிகர்களுக்கு சுந்தரராஜன் குறித்து பெரிய குழப்பம் வந்திருக்கிறது. ஏற்கனவே சுந்தர்ராஜனின் மகன் சித்திரையில் நிலா சோறு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அது பலருக்கும் தெரியும். அது போல அவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவோடு எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு குழப்பம் வந்திருக்கிறது.

இந்த நிலையில் தான் சுந்தர்ராஜன் குறித்து விக்கிபீடியாவில் ரசிகர்கள் தேடி இருக்கும்போது அங்கு அவருடைய மனைவியின் பெயர் சரஸ்வதி என்று இருக்க, இதுகுறித்து துர்கா கொடுத்த பேட்டியில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது பற்றி விரிவாக பார்க்கலாம். அதாவது சுந்தர்ராஜனுக்கு சரஸ்வதி என்ற ஒரு மனைவி இருக்கிறார். அவருக்கு மூன்று மகன்கள் பிறந்திருக்கிறார்கள் அதில் ஒரு மகன்தான் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அதுபோல சுந்தர்ராஜ் மற்றும் சரஸ்வதி தம்பதியினரின் மூன்றாவது மகன் சில வருடங்களுக்கு முன்பு கார் ஆக்ஸிடெண்ட் ஒன்றில் காலமானதாக கூறப்படுகிறது. அதுபோல சுந்தர்ராஜன் துர்காவை இரண்டாவதாக திருமணம் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கும் இப்போது திருமணம் ஆகி விட்டதாம். அதுபோல சுந்தர்ராஜன் இப்போதும் இரண்டு குடும்பத்தோடும் தான் வசித்து வருகிறாராம்.
-
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications