10 வருடங்களாக காரில் குடும்ப வாழ்க்கை.. 5000 படங்களுக்கு மேல்.. நடிகர் ஆர். சுந்தர்ராஜன் மனைவி எமோஷனல்
சென்னை: காமெடி நடிகராகவும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனின் அப்பாவாகவும் நடித்துவரும் ஆர் சுந்தர்ராஜன் மனைவி பல வருடங்களுக்கு பிறகு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் மற்றும் தன்னுடைய கணவரின் சினிமா வாழ்க்கை குறித்தும் அதில் பேசியிருக்கிறார்.
நடிகர் ஆர் சுந்தர்ராஜனின் மனைவி துர்கா ஐயாயிரம் படங்களுக்கு மேலே டப்பிங் பேசி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தங்களுடைய ஆரம்பகால குடும்ப வாழ்க்கை எப்படி இருந்தது என்பது பற்றி அவர் பேசி இருந்தது இன்றைய பல இளைஞர்களுக்கு மோட்டிவேஷனாக இருக்கிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக இருந்து வரும் துர்கா சுந்தர்ராஜன் சமீபத்தில் பேசிய வீடியோ தான் இணையத்தில் பலராலும் பேசப்பட்டு வருகிறது. 1982 ஆம் ஆண்டு முதல் ஆர் சுந்தர்ராஜனின் மனைவியான துர்கா சுந்தர்ராஜன் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் டப்பிங் கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
அதிலும் இவர் முதல் படமான தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தில் கதாநாயகிக்கு இவர் தான் குரல் கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து முந்தானை முடிச்சு, அம்மன் போன்று பல ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். அது பற்றி அவர் பேட்டியில் காமெடியாக தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
அதில் நான் 5000 படங்களுக்கு மேல டப்பிங் பண்ணி இருக்கிறேன். ஆனால் அந்த டயலாக் எல்லாமே இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது எங்களுடைய காலத்தில் சின்ன பிள்ளைகளின் வாய்ஸ் கூட வயதில் கூடிய டப்பிங் ஆர்டிஸ்ட் தான் கொடுக்கிறது. நானே நிறைய படங்களில் சின்ன பிள்ளைகளுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறேன். இப்போது அப்படியெல்லாம் இல்லை. சிறுவர்களுக்கு அவர்களே டப்பிங் வாய்ஸ் கொடுத்து விடுகிறார்கள்.
நான் பூவே பூச்சூடவா திரைப்படத்தில் நதியாவிற்கு வாய்ஸ் கொடுத்தேன். அதுபோல இப்பொழுதும் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நடிகைகளுக்கு வயசாகும்போது எங்களுக்கு வயசாக கூடாதா என்று கேட்டபடியே அவர் பேசிய திரைப்படங்களுக்கான கிளிப்ஸ்களுக்கு அழகாக டப்பிங் பேசி காட்டி அந்த வீடியோவில் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார்.

அதுபோல எனக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகணும் என்று ஆசை வந்ததும் என்னுடைய அம்மா கிட்ட கேட்டேன் நான் பேசலாமா என்று ஆனால் என்னுடைய அம்மா அதெல்லாம் உனக்கு வராது நீ பேசாமல் இரு என்று சொன்னார். ஆனாலும் நான் எங்க அம்மாவோடு சூட்டிங் போகும்போது அங்கு இருக்கிற இயக்குனர்கள் பாப்பா என்ன சொல்றாங்க ஒரு முறை முயற்சி செய்து பார்க்கட்டுமே என்று சொல்ல, அப்படித்தான் நான் டப்பிங் பேச தொடங்கினேன். அதுவே பிறகு என்னுடைய வேலையாக போய்விட்டது.
ஆனால் பிறகு என்னுடைய கணவரோ அல்லது என்னுடைய அம்மாவோ எனக்கு எந்த ஒரு அழுத்தத்தையும் தரவில்லை. அதுபோல எனக்கு கல்யாணம் முடிந்து குழந்தைகள் பிறந்த அந்த நேரத்தில் என்னுடைய குழந்தைகள் எல்லாமே அம்மா தான் பார்த்துக் கொண்டாங்க. என்னுடைய கணவரும் அந்த நேரத்தில் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் பொள்ளாச்சியில் இருப்பார் இன்னொரு நாள் பெங்களூரில் இருப்பார்.
அப்படி அங்கே இங்கேயுமாக அவரும் பறந்து கொண்டே இருந்தார். நானும் ஒவ்வொரு இடமாக டப்பிங் பேசிக் கொண்டிருப்பேன். இதனால் நாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் அதிகமாக சந்தித்துக் கொண்டதே கிடையாது. அவர் ஊருக்கு வரும்போது குழந்தைகளை போய் பார்த்துவிட்டு என்னை பார்ப்பதற்காக நான் டப்பிங் பேசும் ஸ்டூடியோவுக்கு வருவார். வெளியே ஒரு காரில் அவர் எனக்காக காத்திருப்பார். நான் அவரிடம் அங்கு வந்து அந்த 10, 15 நாட்கள் என்னவெல்லாம் நடந்ததோ அதைப்பற்றி பேசுவோம்.
யாருக்கெல்லாம் பணம் கொடுக்கணும் அதை பற்றி பேசுவோம். அதுபோல குழந்தைகளின் உடல்நலம் அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி எல்லாம் நாங்கள் அந்த காருக்குள்ள தான் பேசுவோம். அப்படியே ஒரு பத்து வருஷமாக எங்களுடைய வாழ்க்கை போயிருக்கும் பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் என்னுடைய கணவர் வருவார். வீட்டுக்கு வரும்போது நாங்கள் காரில் மட்டும் தான் சந்தித்துக் கொள்வோம் என்று தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை குறித்து துர்கா சௌந்தர்ராஜன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
-
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
நடிகை ஸ்வாசிகா கணவர் பற்றி சொன்ன வார்த்தை.. மலையாள ரசிகர்கள் கோபம்? ஆனால் நெட்டிசன்கள் சப்போர்ட் -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்












Click it and Unblock the Notifications