Radhika: ஒரு பெண்ணிடம் இப்படி கேள்வி கேட்கலாமா? என்கிட்ட கேட்டு இருந்தா அடிச்சி இருப்பேன்! ஆதங்கத்தில் ராதிகா சரத்குமார்
சென்னை: 96 பட நடிகை கௌரி கிஷன் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில், யூடியூபர் ஒருவர் அவரிடம் மரியாதை குறைவாக கேள்வி எழுப்பிய விவகாரம் தமிழ் திரையுலகில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த பெண்களுக்கு அவமரியாதை அளிக்கும் செயலை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.

ராதிகா சரத்குமாரின் அதிரடி பதிவு
நடிகை ராதிகா சரத்குமார், கௌரி கிஷனுக்கு ஆதரவாக பேசிய விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கௌரி கிஷனை பார்த்து, "நீங்கள் மிகவும் தைரியமாக நிற்பதை பார்க்க பாராட்டத்தக்கது மற்றும் மனதைத் தொடுவது" என்று ராதிகா சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். "ஆனால், உங்கள் இயக்குநர், கதாநாயகன் மற்றும் தயாரிப்பு குழுவினர் உங்களுக்காக நிற்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது" என்று ராதிகா சரத்குமார் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கௌரி கிஷனிடம் இத்தகைய கேள்விகளைக் கேட்ட நபரைக் குறித்து, "press club இந்த சங்கர் (#shanker) என்ற நபரைத் தடை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், "pr union இந்த நபரை அவரது உணர்வின்மைக்காக மட்டுமல்ல, அவரது அறிவின்மைக்காகவும் [stupidity] வெளியேற்ற வேண்டும்" என்று அந்த பதிவில் கூறிி இருக்கிறார்.
மேலும் இது பற்றி பிரபல தனியார் செய்தி சேனலுக்கு ராதிகா கொடுத்த பேட்டியில், கௌரி கிஷன் தன்னை பற்றி ஒருவர் உருவ கேலி செய்யும் விதமாக கேள்வி கேட்டபோது கூட அவரிடம் தெளிவாக பதில் சொன்னார். அவரை சுற்றி அத்தனை ஆண்களும் அவருக்கு எதிராக பேசும் போதும் கௌரி தெளிவாகவும் அமைதியாகவும் பேசி இருந்தார். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்னால் அப்படி பேசி இருக்க முடியுமா? என்று தெரியவில்லை நான் அடித்து இருப்பேன்.
கௌரியிடம் கேள்வி கேட்ட நபர் பத்திரிக்கையாளரா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் இதற்கு முன்பு அவரை பார்த்ததில்லை. நாங்கள் வேலை செய்ய தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இருந்த நிலைமை இப்போது மாறி இருக்கிறது. இப்போது மைக்கை எடுத்துக் கொண்டு பலர் நாங்களும் ரிப்போர்ட்டர் என்று வந்து விடுகிறார்கள். அதனால் தான் நான் யாரிடமும் பேட்டி கொடுப்பதில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு விடுவேன்.
நடிகை குஷ்பூ மற்றும் சரிகா போன்றவர்களை பற்றி அந்த பத்திரிகையாளர் பேசி இருந்தார். அவர்களிடம் இதே போல அந்த பத்திரிகையாளரால் கேள்வி கேட்க முடியுமா? என்பதுதான் என்னுடைய கேள்வி. அதுபோல கௌரி பக்கத்தில் இருந்த அந்த திரைப்படத்தை சார்ந்தவர்களும் அவருக்கு ஆதரவாக கேள்வி கேட்காமல் இருந்தது வெட்கக்கேடு என்று தான் சொல்வேன். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்ல வேண்டும் அந்த பத்திரிக்கையாளர் கௌரியிடம் உங்களிடம் இதை தானே கேட்க முடியும் உங்களிடம் வந்து ட்ரம் பற்றியா கேட்க முடியும் என்று கேட்கிறார். அப்படி என்றால் நடிகைகள் எல்லோரும் முட்டாள் என்று நினைத்து கொண்டிருக்கிறாரா என்று அந்த பேட்டியில் கோபத்துடன் ராதிகா பேசியிருக்கிறார்.
நடிகர் சங்க தலைவர் நாசரின் கண்டனம்
அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் கௌரி கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'அதர்ஸ்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், ஒரு யூடியூபர் கதாநாயகனிடம், "படத்தின் பாடலில் நடிகையைத் தூக்கினீர்களே, நடிகையின் எடை என்ன?" எனக் கேள்வி எழுப்பியதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார்.
சகோதரர்கள்
"திரைத்துறையும் பத்திரிகைத்துறையும் இணைந்து நம் தமிழ் சினிமாவை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்துகின்றன" என்று இரு துறைகளையும் நாசர் சகோதரர்களாக ஒப்பிட்டார். "நல்லத் திரைப்படங்களையும் திறமையானக் கலைஞர்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்கள், சில சமயங்களில் நாங்கள் தவறு செய்யும் போதும் நாகரிகமான விமர்சனங்கள் மூலம் எங்களை சீர்படுத்துகிறார்கள். ஆனால் நேற்று நடந்த சம்பவம் மிகவும் விரும்பத்தகாதது" என்று வேதனை தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பு
"தமிழ் திரையுலகம் எப்போதுமே பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் துறையாக இருந்துள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகிய துறைகளில் திகழ்ந்துள்ளனர். இருப்பினும் இன்று ஒரு பெண் திரைத்துறையில் சாதிப்பது இன்னும் சவாலான ஒன்றாகவே உள்ளது. அவர்களின் பாதுகாப்பும், சுயகௌரவமும் நம் அனைவரின் பொறுப்பாகும்" என்று வலியுறுத்தினார்.
"பத்திரிகையாளர் சந்திப்புகளில் சில வக்கிரமான நபர்கள் நடிகைகளிடம் ஏளனமாக, அவமானப்படுத்தும் வகையில் கேள்வி கேட்பதுக் கவலைக்குரியது" என்று கண்டித்தார். "இன்று யாரும் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி பத்திரிகையாளராகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் சிலர் திரைத்துறையினரைக் குற்றம்சாட்டி, ஆபாசமாக விமர்சித்து பார்வையாளர்களை ஈர்க்க முயல்கின்றனர்" என்று புதிய ஊடகங்களின் தரக்குறைவு குறித்துப் பேசினார்.
நடிகர் சங்கம் மற்றும் ராதிகா சரத்குமார் போன்ற திரைப் பிரபலங்களின் அதிரடியான பதிவுகள், திரைத்துறையில் பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பதற்கான விவாதங்களை அதிகப்படுத்தியுள்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications