லாரன்ஸ் என்ன இப்படி சொல்லிட்டாரு? திடீர் மாற்றத்தால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. குவியும் வேண்டுகோள்
சென்னை: நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர், சமூக சேவகர் என்று பல முகங்களை கொண்ட ராகவா லாரன்ஸ் நேற்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு படங்களின் அறிவிப்பை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இப்போது தன்னால் திரைப்பட அப்டேட் வெளியிடப்பட முடியவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை குவித்து வருகிறது.
அந்த வகையில் ஒரு சில நாட்களாகவே சமூக வலைதள பக்கத்தில் ராகவா லாரன்ஸ் செய்யும் உதவிகள் மற்றும் அவருக்கு மக்கள் மத்தியில் கொடுக்கப்படும் வரவேற்பு தான் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. மே ஒன்றாம் தேதி மாற்றம் என்ற சேவையை தொடங்கி இருக்கும் ராகவா லாரன்ஸ் உடன் ஒரு சில நடிகர் நடிகைகள் அவரோடு இணைந்திருக்கின்றனர்.

அதிலும் எஸ் ஜே சூர்யா, கே பி ஒய் பாலா, அறந்தாங்கி நிஷா போன்ற பலரும் அவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து அவரோடு பயணிக்கிறார்கள். இந்த நிலையில் மாற்றம் என்ற சேவை நிகழ்ச்சியின் மூலமாக லாரன்ஸ் 10 ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கிக் கொண்டிருக்கிறார். அதோடு வழக்கம் போல ஏழை மாணவ, மாணவிகளின் படிப்பு செலவுகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தான் இன்று இரண்டு படங்களின் அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் அந்த இரண்டு படங்களையும் தன்னுடைய ராகவேந்திரா ப்ரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.
குறிப்பாக அவர் அறிவிக்கும் படத்தில் ஒன்றில் கே பி ஒய் பாலா ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன் ராகவா லாரன்ஸ் தன்னுடைய x பக்கத்தில் ஒரு சில தொழில்நுட்ப காரணத்தால் இந்த அறிவிப்பு வெளியாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்திருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இன்று உங்கள் இரண்டு படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று ஆசையோடு காத்திருந்தோம்.
இப்படி ஏமாற்றி விட்டீர்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதுபோல ராகவா லாரன்ஸ் தயாரிக்கும் இரண்டு படங்களின் முன்னோட்ட வீடியோ எடிட்டிங் பணிகள் தாமதம் ஆகிவிட்டதாகவும் அந்த பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் இந்த வாரத்திற்குள் அந்த இரண்டு படங்களில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதுபோல இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தில் கேபிஒய் பாலா ஹீரோவாக நடிக்கும் விஷயம் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில் அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications