நடிகர் ஸ்ரீ என்னுடைய அண்ணன் தான்.. அந்த வீடியோவுக்கு பின்னாடி நடப்பது இதுதான்! நடிகர் உருக்கம்
சென்னை: மாநகரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீ பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் அவருடைய தற்போதைய நிலை குறித்து அவருடன் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த நடிகர் ராகவேந்திரன் எமோஷனலாக பேசி இருக்கிறார். அதோடு ஸ்ரீயின் நிலைமையில்தான் தானும் சில வருடங்களுக்கு முன்பு இருந்தேன் இப்போது ஸ்ரீயின் மனநிலை இதுவாக தான் இருக்கும் என்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
பொதுவாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் அவர்களுக்கு பிளாப் கொடுத்து விட்டால் அவர்களை மறந்து விடுவார்கள். பல வருடங்கள் கழித்து அவர்கள் உடைய படங்களோ அல்லது போஸ்ட் பார்க்கும்போதுதான் இவர் அந்த நடிகர் தானே? இவர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தாரே என்று பலரும் நினைவு கூறுவார்கள்.

எதிர்பாராத மாற்றம்
அதுபோல தான் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீ பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார். சினிமா மற்றும் சீரியலில் ஹாண்ட்சம் பாயாக வலம் வந்த ஸ்ரீ இப்போது உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வீடியோக்கள் தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டாரே என்று புலம்பி தள்ளி வருகிறார்கள்.
திடீர் பிரபலம்
கடந்த ஒரு வருடமாகவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீ புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் அது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆனால் கடைசியாக அரைகுறை உடையுடன் ஆபாசமான செய்கை செய்து ஸ்ரீ போட்டோ போஸ்ட் தான் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீயின் நிலைமைக்கு காரணம் அவருக்கு சரியான திரைப்பட வாய்ப்புகள் இல்லாதது என்று சிலர் கூறி வருகிறார்கள்.
ஒன்றாக நடித்த நடிகர்
இன்னும் ஒரு சிலர் ஸ்ரீ நடித்த திரைப்படங்களில் அவருக்கு சரியாக சம்பளம் கிடைக்கவில்லை அவருடைய குடும்பத்தினரும் கஷ்டத்தில் இருந்த போது இந்த வருமானமும் சரியாக வராததால் மனரீதியாக ஸ்ரீ பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்ரீயின் உடன் கனா காணும் காலங்கள் சீரியலில் புலி கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ராகவேந்திரா ஸ்ரீ குறித்து எமோஷனலாக பேசுகிறார்.
சொல்ல முடியாத பாசம்
அதில், ஸ்ரீ என்னுடைய அண்ணா தான். அவரை சீரியலில் நான் பார்த்து பிரமித்து இருக்கிறேன். மூன்று வருடங்களாக அந்த சீரியலில் நடிக்கும் போது நாங்கள் ஒன்றாக பயணித்தோம் அதற்கு பிறகு அண்ணா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் அதிகமாக பேசிக் கொண்டது கிடையாது. அவனுடைய படங்கள் வெளியாகும் போது மட்டும் நான் சூப்பராக இருக்கிறது என்று போன் செய்து பேசுவேன்.
அந்த வீடியோ உண்மைதான்
நான் எல்லா இடத்திலுமே அவரை என்னுடைய சொந்த அண்ணனாகத்தான் நினைத்தேன். அவருடைய நடிப்பு மற்றும் பாசமான பேச்சு ரொம்பவும் பிடிக்கும். பக்குவமாக பேசுவார் அவருடைய குடும்பத்தினர் மீது அவருக்கு ரொம்பவும் பாசம் உண்டு. ஆனால் இப்போ அவருடைய நிலைமை மொத்தமாக மாறி இருப்பது பார்க்கும்போது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. அவருடைய வீடியோக்களை பார்த்ததும் முதலில் இது அவராக இருக்காது ஏஐ அல்லது யாரோ எடிட் செய்த வீடியோ என்று நினைத்தேன். ஆனால் அவருடைய குரலை கேட்ட பிறகு இது அவருடைய வீடியோ என்று தெரிந்தது.
வெளியே தெரியாத பிரச்சனை
அவருடைய இந்த நிலைமைக்கு மன அழுத்தம் தான். காரணம் இதே நிலைமையில் தான் ஒரு வருடத்திற்கு முன்பு நானும் இருந்தேன். அதனால் என்னால் அவருடைய நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது. ஸ்ரீ அண்ணா ஜாலியாக பேசக்கூடியவர். ஆனால் ஜாலியாக பேசுபவர்களுக்கு வருத்தம் இருக்காது என்று சொல்ல முடியாது. அவர்களுக்குத்தான் அதிகமான வருத்தம் மனதிற்குள்ளே இருக்கும். அதை எல்லோரிடமும் சொல்லி புலம்பி கொண்டிருக்க மாட்டார்கள்.
இதே சம்பவம் நடந்திருக்கு
அதனால் தனக்குத்தானே பேசிக் கொள்வார்கள். ஒரு கட்டத்தில் பக்கத்தில் ஒருவர் இருப்பது போன்று பேசிக் கொண்டிருப்பார்கள். நானும் அது போல தெருவில் பேசிக்கொண்டு போயிருக்கிறேன் ஒருவர் கூப்பிட்டு கேட்ட பிறகுதான் எனக்கே புரிந்தது. நாம ஏதோ வித்தியாசமாக செய்கிறோம் என்று, அதுபோல ஒரு முறை வாழ்ந்து பிரயோஜனம் இல்லை என்று மாடியில் இருந்து குதித்து விட துணிந்து விட்டேன். ஒரு நொடியில் என்னுடைய அம்மா என் கைகளை பிடித்து இழுத்த பிறகுதான் நான் நிலைமையை புரிந்து கொண்டேன்.

வதந்திகளுக்கு விளக்கம்
அதுவரைக்கும் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியாது. அதேபோல இப்போது ஸ்ரீ அண்ணா அவர் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய வீடியோவுக்கு பின்னால் அவருடைய மன அழுத்தமும் குழப்பமும் தான் இருக்கிறது. அவர் சீக்கிரமாக மீண்டு வர வேண்டும் எப்படி இருந்த மனிதன் இப்போது இப்படி மாறிவிட்டார். ஆனாலும் அவரைப்பற்றி பல்வேறு வதங்திகளும் பரவி வருகிறது.
நடிகரின் வேண்டுகோள்
அவர் எதையும் தெரிந்து செய்யவில்லை. அவருக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளாமலே இதுபோன்று செய்து கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய ஆபாச வீடியோ அரைகுறை வீடியோக்களை தயவு செய்து யாரும் ஷேர் செய்யாதீர்கள். நாளைக்கு அவருடைய நிலைமை சரியாகி அவர் மீண்டு வரும்போது தான் இப்படி எல்லாம் செய்து இருக்கிறோமா என்று வருத்தம் அடைவார். அந்த வருத்தமும் அவருக்கு மீண்டும் மன அழுத்தத்தை கொடுக்கும். அதனால் அவருடைய கடைசியாக வெளியிட்ட அரைகுறை ஆடையோடு கடைசியாக வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யாரும் பகிராதீர்கள் என்று ராகவேந்தர் எமோஷனலாக வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications